- Home
- Tamil Nadu News
- விஜய்யை குற்றவாளியாக்க துடிக்கும் உண்மை கண்டறியும் குழு..? TVKவை குறை சொல்ல மாறி மாறி அடித்துக்கொண்ட அதிகாரிகள்
விஜய்யை குற்றவாளியாக்க துடிக்கும் உண்மை கண்டறியும் குழு..? TVKவை குறை சொல்ல மாறி மாறி அடித்துக்கொண்ட அதிகாரிகள்
கரூர் மாவட்டத்தில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய உண்மை கண்டறியும் குழு உறுப்பினர்கள் மாறி மாறி விஜய் மற்றும் தவெக.வை குறை கூறிய விதம் பொதுமக்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேள்விகளால் திணறிய உண்மை கண்டறியும் குழு
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே உண்மை கண்டறியும் குழு உறுப்பினர்கள் விசாரணை மேற்கொண்டு இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமும் கொடுத்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் உண்மை கண்டறியும் குழு உறுப்பினர்கள் போட்டிப்போட்டு தவெக மற்றும் விஜய் மீது குறை கூறிய விதம் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவெக கூட்டத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை..?
பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய உறுப்பினர்கள், “தவெக கூட்டத்திற்கு 10 ஆயிரம் தொண்டர்கள் வருவார்கள் என்று கூறி அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் கூட்டத்திற்கு 30 ஆயிரத்திற்கு குறையாமல் தொண்டர்கள் வந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் காலை 8 மணி முதலே இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதி மிகவும் ஏழ்மையானவர்கள் வசிக்கும் பகுதி என்பதால் அவர்களும் காலை முதலே அப்பகுதியில் குவிந்துள்ளனர்.
விஜய் 3 மணிக்கு வராதது ஏன்..?
விஜய் 3 மணிக்கு வருவதாக அனுமதி கோரிவிட்டு மாலை 7 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இதுவும் அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என உறுப்பினர் ஒருவர் சொல்ல, இல்லை அனுமதி பெற்றது 3 மணி முதல் இரவு 10 மணி வரை ஆகையால் அவர்கள் வந்ததில் தவறில்லை என்று மற்றொரு உறுப்பினர் மாற்றி பேசினார். தொடர்ச்சியாக இதே போன்று குழப்ப மனநிலையிலேயே உறுப்பினர்கள் மாற்றி மாற்றி பேசினர்.
அரசின் குரலாக ஒலித்த உண்மை கண்டறியும் குழுவை கேள்விகளால் துளைத்து எடுத்த -
Journalist - Felix 🔥https://t.co/rDX2FraQZJ@TVKVijayHQpic.twitter.com/4SIEHGfdPU— VIJAY VIGNESH 🇪🇦 TVK 🇪🇦 (@VigneshVic67385) October 16, 2025
பிரசார வாகனத்தை தவறாக வழிநடத்திய போலீஸ்?
மேலும் விஜய்யின் பிரசார வாகனம் தவறான திசையில் பயணித்ததாக செல்கிறீர்கள், ஆனால் கரூர் மாநகருக்குள் நுழைந்தது முதல் ஒரு காவல்துறை மூத்த அதிகாரி தான் வழிநடத்தி அழைத்துச் செல்கின்றனர். அப்படியென்றால் காவல்துறை அதிகாரி தானே விஜய்யை தவறாக வழிநடத்தி சென்றிருக்க வேண்டும் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு உறுப்பினர்களிடம் சரியான பதில் இல்லை.
உண்மை கண்டறியும் குழுவின் செய்தியாளர் சந்திப்பை பார்த்த பெரும்பாலான பொதுமக்கள் விஜய் சிபிஐ விசாரணை கோரியது மிகவும் சரியான நடவடிக்கை. மாநில அரசே விசாரணை மேற்கொண்டிருந்தால் தீர்ப்பு விசாரணைக்கு முன்பாகவே தவெக.வுக்கு எதிராக வந்திருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.