ஒரே நாளில் பல்டி அடித்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? அலறும் இல்லத்தரசிகள்
தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது, அதே சமயம் வரத்து அதிகரிப்பால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் முக்கிய காய்கறிகளின் தற்போதைய விலையை பார்க்கலாம்.

சமையலில் முக்கியமாக தேவைப்படும் காய்கறிகளாக தக்காளி மற்றும் வெங்காயம் உள்ளது. எனவே இதன் விலையை பொறுத்தே நடுத்தர வர்க்க மக்களின் மாத பட்ஜெட்டில் சேமிக்கமுடியும். அந்த வகையில் ரசம் முதல் பிரியாணி வரை எது சமைப்பதாக இருந்தாலும் தக்காளி வெங்காயம் கட்டாயம் தேவை.
எனவே காய்கறி சந்தையில் எந்த காய்கறிகள் வாங்குகிறார்களோ இல்லையோ கட்டாயம் இந்த இரண்டையும் அதிகளவில் வாங்குவார்கள். இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த தக்காளி விலை தற்போது உயர தொடங்கியுள்ளது.
ஒரு கிலோ தக்காளி கடந்த வாரம் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 100 ரூபாய்க்கு 5 முதல் 6 கிலோ வரை தக்காளி விற்பனையானது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை உயர தொடங்கியுள்ளது.
ஒரு கிலோ தக்காளி 35 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாயை தாண்டியுள்ளது. அதே நேரம் வெங்காயத்தின் வரத்து அதிகளவில் இருப்பதால் விலையானது குறைந்துள்ளது. 100 ரூபாய்க்கு 6 முதல் 7 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,
பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞசி கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை விற்பனை செய்யப்பட்டு வருகிறது