- Home
- Tamil Nadu News
- குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! 3 நாட்கள் தொடர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
School Holiday: நாகூர் தர்காவின் 468-ம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு, டிசம்பர் 1 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும்.

பொது விடுமுறையை தவிர்த்து உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் இந்த விடுமுறையானது பள்ளிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு பொருந்துமா என்ற முடிவையும் மாவட்ட ஆட்சியர்கள் தீர்மானிக்கின்றனர்.
நாகூர் தர்காவின் கந்தூரிவிழா
இந்நிலையில் நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 468-ம் ஆண்டு கந்தூரிவிழா நவம்பர் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 1ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவமும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் கலந்துகொள்வார். இதன் காரணமாக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் டிசம்பர் 1ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவமும் நடைபெறுவதையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவையொட்டி வரும் டிசம்பர் 1ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை
இதன் மூலம் நாகை மாவட்டத்துக்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. அதாவது நவம்பர் 29ம் தேதி சனிக்கிழமை, நவம்பர் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, டிசம்பர் 1ம் தேதி திங்கள் கிழமை என மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கின்றனர்.

