- Home
- Business
- Vegetable Price: காய்கறிகள் விலையை ஏற்றிய கனமழை.! இனி தக்காளி ரசம், முருங்கைக்காய் சாம்பாருக்கு வாய்ப்பே இல்லை.!
Vegetable Price: காய்கறிகள் விலையை ஏற்றிய கனமழை.! இனி தக்காளி ரசம், முருங்கைக்காய் சாம்பாருக்கு வாய்ப்பே இல்லை.!
கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்ததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தொட்டுள்ள நிலையில், வெங்காயம், பீன்ஸ், முருங்கைக்காய் போன்ற மற்ற காய்கறிகளின் விலையும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

காய்கறிகள் விலை புதிய உச்சம்
கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வத்து கனிசமாக குறைந்துள்ளது. அதுவும் கனமழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி ஒரு வாரத்துக்கு ஒரு தக்காளிதான்.!
மொத்தவிற்பனையில் தக்காளி விலை 1 கிலோ 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லரை விலையில், கிட்டத்தட்ட ரூ.100 வரை விற்பனை செய்யப்படும் வியாபரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையும் கனிசமாக உயர்ந்து வருகிறது கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 30 முதல்40 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது இதன் வரத்தும் சரிவைடந்துள்ளதால் ஒரு கிலோ 50 ரூபாயை தாண்டியுள்ளது.
அதேபோல் பீட்ரூட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ குடை மிளகாய் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பாகற்காய் 55 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இனி சாம்பாரில் காய்கறிகள் இருக்காது.!
கோயம்பேடு காய்கறிசந்தையில் நாட்டு காய்கறிகள் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளது. கொத்தவரை ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 76 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 560 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தக்காளி 100 ரூபாய்க்கு ஒன்றரை கிலோவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிராம் கணக்கில் வங்கிச்செல்லும் பொதுமக்கள்
எப்போதும் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்லும் மக்கள் தற்போது சிறிய மஞ்சள் பையில் வாங்கி செல்கினறனர். அதிகபட்சமாக 1 கிலோ முருங்கைகாய் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், இனி முருங்கைக்காய் சாம்பாரை கனவில் தான் சாப்பிடமுடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

