MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையில் நடக்கும் போர்.. களத்தில் இல்லாத அதிமுக.!

இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையில் நடக்கும் போர்.. களத்தில் இல்லாத அதிமுக.!

tvk vijay: தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.க்குமான தேர்தல் என ஸ்டாலின் பேசுகிறார். இப்போது நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தலா, பிரதமர் பதவிக்கான தேர்தலா, முதல்வர் யார்?

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 23 2026, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம்தான்
Image Credit : Asianet News

தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம்தான்

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய தவெக தலைவர் விஜய்: தவெகவுக்கும் நமக்கும் எதிரான சூழ்ச்சிகள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம்தான். அது காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் இருந்தபோது நல்லாட்சி அவர்கள் ஆண்டபோதுதான். இன்றைக்கு சூப்பர் ஸ்டேண்டப் காமெடிக்காரர் நடத்துற மாநிலமாக மாறிடுச்சு. நான் உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், நமக்கு எதிராக என்ன சூழ்ச்சி நடக்கும் என தெரியும். தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து உங்களை சந்திப்பேன்.

25
தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர்
Image Credit : Asianet News

தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர்

தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.க்குமான தேர்தல் என ஸ்டாலின் பேசுகிறார். இப்போது நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தலா, பிரதமர் பதவிக்கான தேர்தலா, முதல்வர் யார்? எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என நம் மக்களுக்கு தெளிவாகத் தெரியும். இந்த தேர்தல் தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். விஜய்யுக்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கும் போர். தூய சக்தி தவெக, தீய சக்தி திமுகவுக்கு இடையே நடக்கும் போர்.

Related Articles

Related image1
சட்டுபுட்டுன்னு செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Related image2
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி! வெங்காயம்! அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! ஒரு கிலோ இவ்வளவு தானா?
35
 களத்தில் இல்லாத அதிமுக
Image Credit : Asianet News

களத்தில் இல்லாத அதிமுக

வரும் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வழக்கமான தேர்தல் அல்ல. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது போன்ற தேர்தல். இந்த முறை ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறார்கள். காரணம், நான் ஊழலை எதிர்க்கிறேன். ஏதாவது பேசினால் களத்தில் இல்லாதவர்கள் வான்டடாக வண்டியில் ஏறுகிறார்கள். நானும் மக்களும் வேறு வேறு இல்லை. ரத்தமும் சதையும் மாதிரி. உணர்வும், உயிரும் மாதிரி. பிரிக்கவே முடியாது. இந்த விஜய் வேண்டுமா, ஸ்டாலின் சார் வேண்டுமா. யாரை நீங்கள் நம்புகிறீர்கள்.

45
புது நண்பர் ஸ்டாலின் சார்
Image Credit : Asianet News

புது நண்பர் ஸ்டாலின் சார்

திமுகவுக்கு போட்டி தவெகதான். நீங்கள் அரசியலுக்கு வரும்முன் உங்கள் சொத்து என்ன. இப்போது உங்கள் சொத்து என்ன. வெளியிட முடியுமா. தொழில் மூலம் வந்தால் அதை வெளியிட முடியுமா. இதை கேட்டால் ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து நம்மீது சேற்றை வாரி பூசுவார்கள். எனக்கு புது நண்பர் ஸ்டாலின் சார் கிடைத்துள்ளார். அவர் எல்லோரும் நண்பர்கள் என்கிறார். அப்படி என்றால் கரூர் விவகாரத்தில் என் மீது பழியை தூக்கி போட்டீர்கள். மனசாட்சி இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பீர்களா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

55
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை
Image Credit : x

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை

இங்கே சில அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஒருசில நேரங்களில் அமைதியாக இருந்தால் ஒரு பிரச்சினையும் வராது. தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. சட்டம்-ஒழுங்கு காணாமல் போய் ரொம்ப நாளாகிவிட்டது. இந்த தீய சக்திக்கு எண்டு கார்டு போட வேண்டும் என்றால், அவர்களை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு பட்டனை அழுத்த வேண்டும். தேர்தலில் விசில் சின்னம் அருகே உள்ள பட்டனை அழுத்த வேண்டும் என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
மு. க. ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கரூர் விவகாரத்தில் நான் குற்றவாளியா..? உங்களுக்கு மனசாட்சி இருக்கா..? முதல்வருக்கு விஜய் கேள்வி
Recommended image2
இன்று மாலை 6 மணி வரை டாஸ்டாக் கடைகளை மூட திடீர் உத்தரவு.! இதுதான் காரணமா?
Recommended image3
சட்டுபுட்டுன்னு செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Related Stories
Recommended image1
சட்டுபுட்டுன்னு செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image2
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி! வெங்காயம்! அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! ஒரு கிலோ இவ்வளவு தானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved