வெயிலோடு கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்.! அடுத்த மழை எப்போது- வெதர்மேன் அப்டேட் என்ன.?
வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தொடங்கியது வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் நீர் ஆதாதங்களை அதிகப்படியாக தரக்கூடிய மழை வடகிழக்கு பருவமழை, அக்டோபர் இறுதியில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது. எப்போதும் டிசம்பர் மாதத்தை பார்த்தால் மட்டுமே சென்னைவாசிகளுக்கு பயம். ஆனால் இந்த முறை அக்டோபர் மாதமே அலறவிட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
rain
ரெட் அலர்ட் எச்சரிக்கை- தயார் நிலையில் மக்கள்
ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்தது. இருந்த போதும் வானிலை மையம் கொடுத்திருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையால் எப்போது வெண்டும் என்றாலும் மழை பெய்யும் என்ற அலர்ட் காரணமாக மக்கள் எதற்கும் தயாராகவே இருந்தனர். குறிப்பாக உணவு பொருட்களில் இருந்து வாகனங்களை பாதுகாப்பது வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தற்போது வரை ஒரு துளி மழை கூட பெய்யவில்லை. இதனால் வானிலை மையத்தின் தகவல்கள் சரிவர இல்லையென விளாச தொடங்கிவிட்டனர். வேறு வழியின்றி வானிலை மையமும் நேற்று கொடுத்திருந்த ரெட் அலர்டை திரும்ப பெற்றது.
Tamilnadu rain
சுட்டெரிக்க தொடங்கிய வெயில்
இன்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. எனவே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ன ஆச்சு.? சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டது இது கரையை கடந்ததாக என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று மதியம் முதல் ஒரு துளி கூட மழை பெய்யவில்லை. மேகங்கள் இல்லாத காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லூருக்கு அருகில் நிலத்தை நோக்கி நகர்கிறது.
Northeast Monsoon Alert in South India
மீண்டும் மழை எப்போது.?
காற்றழுத்தம் கரையை கடப்பது கூட அங்கு யாரும் அறிய மாட்டார்கள், ஏனென்றால் அதில் எதுவும் இல்லை, கரையை கடக்கும் நேரத்தில் அது வெயிலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் இன்று சூரியன் உச்சம் பெறும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்நாட்டில் நகர்ந்து, அதன் தெற்கே சென்னை அமைந்திருப்பதால், மேற்குப் பக்கத்திலிருந்து (நிலம்) தற்காலிக காற்று வீசும்,
எனவே இன்று மாலை முதல் நாளை காலை வரை வேப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். சென்னை, பாண்டி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆங்காங்கே சாதாரண மழை பெய்யும். சில இடங்களில் மழை பெய்யும், சில இடங்களில் மழை பெய்யாது என தெரிவித்துள்ளார்.