Anbumani: ரெட் அலர்ட் கொடுத்தீங்க! ஒரு சொட்டு மழைக்கூட பெய்யல! வானிலை மையத்தை மீண்டும் சீண்டும் அன்புமணி!
Red Alert for Chennai: சென்னையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் மழை பெய்யாததால் வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டும் வானிலை ஆய்வு மையத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும், இன்னும் சில இடங்களில் மிக கனமழையும் வெளுத்து வாங்கியது. இதனிடையே, வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே, வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: TASMAC Shop: குடிமகன்களுக்கு குஷியான செய்தி வந்தாச்சு! டாஸ்மாக் கடைகளில் புதிய வசதி!
tamilnadu rain
அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் இன்று மாலை வரை ஒரு சொட்டு மழை கூட இல்லை. அரசும் மக்களும் தயாராக இருக்க வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: School Holiday: பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? வெளியான முக்கிய தகவல்!
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. அப்போது அன்புமணி வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். சென்னை வானிலை ஆய்வு மையம். தேவையில்லை அது வேஸ்ட். இந்த வேலையை ஐந்தாவது படிக்கிற பையன் பண்ணிவிட்டு போவான்.
இவங்க என்ன பண்ணுவாங்க, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும், சில மாவட்டங்களில் கொஞ்சம் கனமழை பெய்யும், ஒரு சில மாவட்டங்களில் காற்றுடன் மழை பொழியும். இது எங்களுக்கு தெரியாதா? அது நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியுமா? அதுக்கு எதுக்கு நீங்க தொழில்நுட்பம் வச்சிருக்கீங்க. உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறிக்கொண்டு வருகிறது. இன்னும் நீங்கள் சுதந்திரத்திற்கு முன்பு என்ன நிலையோ அதே நிலையில் தான் இருக்கிறீர்கள் என்று கடுமையாக விமர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.