- Home
- Tamil Nadu News
- பெட்டி பெட்டியாக கொட்டிக்கிடக்கும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
பெட்டி பெட்டியாக கொட்டிக்கிடக்கும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பால், தமிழகத்தில் பல்வேறு சந்தைக்கு பெட்டி பெட்டியாக தக்காளி வந்துள்ளது.

தக்காளி வெங்காயம் விலை
ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து வகையான சமையல்களுக்கும் தக்காளி மற்றும் வெங்காயம் முக்கிய தேவையாகும். இதன் விலை அதிகரித்தால் இல்லத்தரிசகள் நிலை அதோ கதி தான். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது.
ஒரு கிலோ தக்காளி, வெங்காயத்தின் விலையானது தங்கத்திற்கு நிகராக விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக அரை கிலோ ஒரு கிலோ என்ற அளவில் மட்டுமே பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
மூட்டை மூட்டையாக வெங்காயம்
மத்திய அரசும் வெங்காய விலையை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரயில்களில் மூட்டை மூட்டையாக வெங்காயத்தை அனுப்பியது. இந்த நிலையில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் தக்காளியை செடியில் இருந்து பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விடுகின்றனர். இருந்த போதும் காய்கறி சந்தைக்கு பெட்டி பெட்டியாக தக்காளியும், மூட்டை மூட்டையாக வெங்காயமும் வந்து கொண்டுள்ளது.
சரியும் தக்காளி விலை
இதன் காரணமாக விலையானது சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 6முதல் 7 கிலோ வரை 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனைசெய்யப்படுகிறது.
இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும்,
பச்சை காய்கறி விலை என்ன.?
தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தது பச்சை காய்கறிகள் விலை
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.