MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.75,000 முதல் 10 லட்சம் வரை ரொம்ப கம்மி வட்டியில் கடன்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.75,000 முதல் 10 லட்சம் வரை ரொம்ப கம்மி வட்டியில் கடன்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்களுக்காக பிரத்யேக கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெண்கள் தொழில் தொடங்க பிணையமின்றி ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

2 Min read
vinoth kumar
Published : Nov 25 2025, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்கள்
Image Credit : tndipr

தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்கள்

மகளிர் முன்னேறும் வகையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி சரவெடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடன் உதவி திட்டங்கள், மானிய உதவி, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு என செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமானது, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கி, குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் ஏற்படுத்தி வருகிறது. குழுக்களின் தொழில் வளர்ச்சியடையும் போது, தேவைப்படும் கூடுதல் நிதியை சுய உதவிக் குழுக்கள் வங்கிக் கடன் இணைப்பு திட்டத்தின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்ய இயலாது.

28
தொழில்களுக்கு பிரத்யேக கடன் திட்டம்
Image Credit : tndipr

தொழில்களுக்கு பிரத்யேக கடன் திட்டம்

இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சுய உதவிக் குழுவின் பெண் உறுப்பினர்களும், சொந்தமாக தொழில் புரிந்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், தேவைப்படும் கடன் தேவைகளை, வங்கிகளிலிருந்து எளிதில் பெற்றிடவும் உதவிடும் வகையில் பெண்கள் தலைமையிலான (Women Led Enterprises) தொழில்களுக்கு பிரத்யேக கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Related image1
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போ அக்கவுண்டில் வரும்? நாள் குறித்த துணை முதல்வர்
Related image2
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
38
மகளிர் கடன் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
Image Credit : our own

மகளிர் கடன் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இந்த கடன் உதவி திட்டத்தின் கீழ் நிலையான முதலீடு (Term Loan) அல்லது நிலையான முதலீடும், நடைமுறை முதலீடும் (Working Capital) இணைந்த இருவகையான கடன்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். பிணையம் எதுவும் இன்றி ரூ.75,000 முதல் ரூ.10 லட்சம் வரை, வேளாண் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு CGTMSE/CGFMU என்ற கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. CGTMSE/CGFMU திட்டங்களின் கீழ் வங்கிகள் தாங்கள் வழங்கும் கடனுக்கான உத்தரவாதத்தை பெறுகின்றன. இச்சேவைக்கான கட்டணம் கடன் வாங்குபவர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

48
கடன் பெறுவதற்கான தகுதிகள்
Image Credit : Asianet News

கடன் பெறுவதற்கான தகுதிகள்

* ஏற்கனவே தொழில் முனைபவராக இருக்க வேண்டும்.

* 21 வயதிற்கு மேற்பட்ட கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.

* அவர் சார்ந்திருக்கும் குழு ஆரம்பிக்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

* அக்குழு ஒரு வங்கிக் கடனைப் பெற்று வெற்றிகரமாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.

* கடன் பெற விரும்புபவர் குழுவில் சேர்ந்து குறைந்த பட்சம் 2 வருடங்களாவது ஆகியிருப்பதுடன் ஒரு கடன் சுழற்சியையாவது வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

58
மானிய கடன் உதவிகள் - திட்டத்தின் பயன்கள்
Image Credit : AI

மானிய கடன் உதவிகள் - திட்டத்தின் பயன்கள்

வட்டி மானியம்

வங்கிகள் வழங்கிய கடன் தொகையை தவணை தவறாமல் உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் பெண் தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியில், 2% மானியமாக வழங்கப்படுகிறது.

கடன் உத்தரவாதக் கட்டணங்களைத் திரும்ப பெறுதல்

இத்திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு, 5 ஆண்டுகள் வரை, பயனாளியிடமிருந்து வங்கிகள் வசூல் செய்யும் CGTMSE/CGFMU என்ற கடன் உத்தரவாதக் கட்டணங்களைத் திரும்ப பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய சலுகைள் ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்

68
கடன் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
Image Credit : our own

கடன் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

பண்ணை தொடர்பான உற்பத்தி தொழில்களுக்கு

* ஆதார் அட்டையின் நகல்

* ரேஷன் அட்டையின் நகல்

* வங்கி பாஸ் புத்தகத்தின் நகல்

* விற்பனையாளர் பற்றிய விபரம்

* சுய உதவிக்குழுவின் தீர்மானம்

ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான அத்தாட்சி

78
பண்ணை சாராத தொழில்களுக்கு ஆவணங்கள்
Image Credit : Freepik

பண்ணை சாராத தொழில்களுக்கு ஆவணங்கள்

* ஆதார் அட்டையின் நகல்

* ரேஷன் அட்டையின் நகல்

* வங்கி பாஸ் புத்தகத்தின் நகல்

* பான் அட்டையின் நகல்

சுய உதவிக்குழுவின் தீர்மானம்

உதயம் / FSSAI / GST பதிவின் நகல்

88
மூலப்பொருட்கள் / இயந்திரங்களுக்கான விலைப்புள்ளி
Image Credit : SCH

மூலப்பொருட்கள் / இயந்திரங்களுக்கான விலைப்புள்ளி

சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்காக வங்கிகள் பிரத்யேகமாக இக்கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இணைந்திருக்கும் சுய உதவிக் குழுவிலுள்ள அனைத்து தகுதியான உறுப்பினர்களும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெற, அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) / வட்டார அளவிலான கூட்டமைப்பு (BLF)/ சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் (CBC) அல்லது கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையை அணுகி விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
பெண்கள்
மு. க. ஸ்டாலின்
மகளிர் உரிமைத் தொகை
Latest Videos
Recommended Stories
Recommended image1
ப்ளீஸ்.. என்னை தேடாதீங்க.. திருமணமான 18 நாளில் புதுப்பெண் தாலியை கழற்றிவிட்டு எஸ்கேப்! கணவருக்கு வந்த அதிர்ச்சி மெசேஜ்!
Recommended image2
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போ அக்கவுண்டில் வரும்? நாள் குறித்த துணை முதல்வர்
Recommended image3
நவம்பர் 27, விஜய் உடன் கைகோர்க்கும் செங்கோட்டையன்... அதிரும் அரசியல் களம்
Related Stories
Recommended image1
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போ அக்கவுண்டில் வரும்? நாள் குறித்த துணை முதல்வர்
Recommended image2
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved