- Home
- Tamil Nadu News
- தேர்தல் நெருங்கும் நேரத்தில் கே.என்.நேருவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கே.என்.நேருவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!
KN Nehru: அமைச்சர் கே.என் நேரு துறையில் வேலைவாய்ப்பு நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அடுத்தடுத்து கடிதம் அனுப்பியது.

அமைச்சர் கே.என் நேரு துறையில் ஊழல்
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு துறையில் வேலைவாய்ப்பு நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி தமிழக டிஜிபிக்கு அடுத்தடுத்து கடிதம் அனுப்பியது. ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக எம்.பி. இன்பதுரை
இந்நிலையில் கே.என்.நேருவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் 1020 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதேபோல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை பணியிடங்களை நிரப்புவதில் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
இந்த இரண்டு மனுக்கள் ஏற்கனவே தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறையில் ஒப்பந்தங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு ரூ.1,020 கோடி லட்சம் வாங்கியதாக கே.என்.நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கே.என்.நேருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

