- Home
- Tamil Nadu News
- சம்பள அக்கவுண்டில் வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு... குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
சம்பள அக்கவுண்டில் வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு... குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
Government Employee: தமிழக அரசு ஊழியர்களுக்கான விரிவான ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 3 வங்கிகள் இணைந்துள்ளன. ஏற்கனவே 7 வங்கிகளுடன் ஒப்பந்தம்.

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சூப்பர் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதாவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன், பண்டிகை கால முன்பண சலுகை, மகப்பேறு கால விடுமுறை அதிகரிப்பு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் விரிவான ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு மே மாதம் 19ம் தேதி 7 முன்னணி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தில் மேலும் 3 வங்கிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்: தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மாநில அரசுப் பணியாளர்களுக்கு, விபத்து காப்பீடு, கடன் சலுகை உள்ளிட்ட சில சிறப்பு சேவைகளை முன்னணி வங்கிகள் வழங்க முன்வந்துள்ளதாக கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கு இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னணி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குறைந்தபட்ச ஆயுள் காப்பீடாக ரூ.10 லட்சம், தனிப்பட்ட விபத்து காப்பீடாக ரூ.1 கோடி வழங்க அந்த வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளன.
தனிப்பட்ட விபத்து காப்பீட்டின்படி, இறந்துபோன அரசு ஊழியரின் குழந்தைகளுக்கு கல்வி உதவிகள், திருமணமாகாத மகளுக்கு திருமண உதவிகளை வங்கிகள் வழங்க வேண்டுமென்ற நிபந்தனை உள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி, டி.என்.எஸ்.சி., பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 3 வங்கிகளும் இந்த சலுகைகளை தங்களிடம் சம்பளக் கணக்கு வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்க முன்வந்துள்ளன. எனவே இந்த வங்கிகளுடனும் அரசுக் கருவூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்படுகிறது.

