MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • AIADMK: போதுண்டா சாமி! நீங்களும் உங்க கட்சியும்! அதிமுகவிலிருந்து தெறித்து ஓடும் முன்னாள் எம்.பி.! அதிர்ச்சியில் இபிஎஸ்

AIADMK: போதுண்டா சாமி! நீங்களும் உங்க கட்சியும்! அதிமுகவிலிருந்து தெறித்து ஓடும் முன்னாள் எம்.பி.! அதிர்ச்சியில் இபிஎஸ்

Edappadi Palanisamy: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பாதையில் இருந்து கட்சி விலகி, பிளவுபட்டுள்ளதாகவும், இதுவே தொடர் தோல்விகளுக்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விலகல் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

3 Min read
Author : vinoth kumar
Published : May 24 2026, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்
Image Credit : Asianet News

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் விலகி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி. டாக்டர் வேணுகோபால் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களைக் கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் கழகமும், தொண்டர்களும் புரட்சித்தலைவர் MGR ஒருவரையே சார்ந்து இருந்தபோதும், கழகத்திலிருந்து விலகி சென்றவர்களையும், எதிரணியில் உள்ளவர்களையும், கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். "எம்.ஜி.ஆர் மக்களை கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் கழகமும், தொண்டர்கரும் புரட்சித்தலைவர் MGR ஒருவரையே சார்ந்து இருந்தபோதும் கழகத்திலிருந்து விலகி சென்றவர்களையும், எதிரணியில் உள்ளவர்களையும், கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். அவரது அரசியல் வாரிசாக தனிப்பெறும் மக்கள் சக்தியாக ஜெயலலிதா அவர்களும், எம்ஜிஆர் பாதையில் கழகத்தை வலுப்படுத்த, பிரிந்து சென்ற தலைவர்களை எல்காம் இயக்கத்தில் இணைத்து கழகத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடும், வலிமையோடும் வழிநடத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
பெற்றோரை இழந்து வாடும் அனாதையான குழந்தை
Image Credit : Asianet News

பெற்றோரை இழந்து வாடும் அனாதையான குழந்தை

அத்தகைய மாபெரும் இயக்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய தலைமையில் இயங்கிய கட்டுக்கோப்பான இயக்கம் நம்முடைய அஇஅதிமுக இன்றைய தினம் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக, பெற்றோரை இழந்து வாடும் அனாதையான குழந்தை யாரிடம், செல்வது என்று வழித்தெரியாமல் தத்தளிப்பது போல் இன்றைய தினம் நம்முடைய கழகத்தின் தொண்டர்களின் நிலை உள்ளது.

Related Articles

Related image1
Tamilnadu Power Cut: மே 25ம் தேதி! வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Related image2
தமிழக வானிலையில் திடீர் திருப்பம்! இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
35
பட்டியலின மக்கள் புறக்கணிப்பு
Image Credit : Getty

பட்டியலின மக்கள் புறக்கணிப்பு

புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் ஒன்றரை கோடி தொண்டர்களாக கட்டமைக்கப்பட்டு, 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாராகுமன்றத்தில் இந்தியாலிலேயே மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக வலிமை பெற்றது. இப்படிப்பட்ட வலுவான இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தற்போது இயக்கம் சந்தித்து வரும் தொடர் பின்னடைவுகளுக்கு பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் சமூக காரணிகள் உள்ளன. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் அஇஅதிமுக அசைக்க முடியாத பலமாகப் பட்டியல் இன ஆதரவு இருந்தது. அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஒரு வலுவான அனைவருக்குமான தோற்றம் குறைய தொடங்கியதால், அந்த ஆதரவு தளம் படிப்படியாகச் சரிந்தது. தற்போதைய அரசியல் சூழலில், பட்டியலின மக்கள் தங்களை அஇஅதிமுகவில் இருந்து முழுமையாக துண்டித்து கொண்டதோ, அல்லது புறக்கணிப்பதோ கழகத்தில் தேர்தல் தோல்விகளுக்கு ஒரு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

45
 அம்மா ஆட்சியை அமைப்பதற்கு பாடுபட வேண்டும்
Image Credit : Asianet News

அம்மா ஆட்சியை அமைப்பதற்கு பாடுபட வேண்டும்

அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்துச் சென்ற கழகம் "சமூக கூட்டமைப்பு தற்போது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி எழும் தோற்றம், மற்ற சமூகத்தவரிடையே ஒரு இடைவெளியை உருவாக்கி உள்ளது. மீண்டும் கழகம் பழைய பலத்தை பெறவேண்டும் என்றால் அனைத்து கழகத்தினரையும் உள்ளடக்கி ஒரு பொதுவான அரசியல் அணுகுமுறையையும் நம்பிக்கையும் மீண்டும் கட்டி எழுப்பவேண்டியது காலத்தில் கட்டாயமாகும். தமிழ் மக்கள் நலனையும், கழகத் தொண்டர்கள் நலனையும் கருத்தில் கொள்ளாமல் பல்வேறு முரண்பட்ட கருத்துகளோடு செயல்பட்டு வரும் நம்முடைய கழகத்தை வலுப்படுத்த அனைவரும் விட்டுக்கொடுத்து ஓரணியில் திரண்டு அம்மா பொன்மொழியாகக் கூறிய அஇஅதிமுக என்ற பேரியக்கம் என்னுடைய மறைவிற்கு பிறகும் "நூற்றாண்டுகள் வாழும்!"என்பதை நினைவில் கொண்டு அம்மா அவர்களின் கனவை நினைவாக்க அனைவரும் ஒன்றிணைந்து கழகத்தை வலிமைப்படுத்தி கழகத் தொண்டர்களின் நன்மதிப்பை பெற்று அனைவரும் ஒருங்கிணைந்துன் மீண்டும் அம்மா ஆட்சியை அமைப்பதற்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

55
அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி
Image Credit : Asianet News

அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட மக்களவை, மாநிலங்களவை அஇஅதிமு.க பாராளுமன்ற குழுத் தலைவராகவும் இந்திய பாராளுமன்ற அரசு ஊர்ச்சித் துறை நிலைக் குழு தலைவராகவும், கழகத்தின் மருந்துவ அணிச் செய்யாளராகவும் கழகத்தில் ஆட்சிமன்றக் குழ உறுப்பினராகவும், பல்வேறு பொறுப்புகளை வகித்ததினாலும் கடந்த 2017ம் ஆண்டு அம்மா மறைவிற்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அணிகளாக பிளவுபடும் சூழ்நிலையிலும், திறம்பட செயல்பட்டு ஓரணியாக வழி நடத்தி சென்றவன் என்ற காரணத்தினாலும் இன்றைய சூழ்நிலையில் இந்த கேளிக்கையை கழகத் தொண்டர்கள் அனைவரின் சார்பாக முன்வைத்து மீண்டும் கழகம் எழுச்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மிக்க கனத்த இதயத்தோடும் ஆழ்ந்த மன வருத்தத்தோடும் இன்று முதல் என்னை கழகத்திலிருந்து விடுவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து வெளியேறி வருவது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஸ்வீட் நியூஸ்! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! தமிழக அரசு சொன்ன செம அப்டேட்!
Recommended image2
Now Playing
அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
Recommended image3
Schools Re Opening: ஜூன் 1 பள்ளிகள் திறக்கப்படுமா..? தனியார் பள்ளிகளின் கோரிக்கையால் தள்ளிவைப்பு..?
Related Stories
Recommended image1
Tamilnadu Power Cut: மே 25ம் தேதி! வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Recommended image2
தமிழக வானிலையில் திடீர் திருப்பம்! இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved