- Home
- Tamil Nadu News
- லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி.. வெங்காயம்! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி.. வெங்காயம்! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
சென்னை கோயம்பேடு சந்தையில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தக்காளி மற்றும் வெங்காயம் விலை குறைந்துள்ளது. 100 ரூபாய்க்கு 4 கிலோ வெங்காயமும், 5 கிலோ தக்காளியும் விற்பனை.

தக்காளி வெங்காயம்
சமையலுக்கு முக்கிய பங்கு வகிப்பது தக்காளி மற்றும் வெங்காயம். அதாவது ரசம் முதல் பிரியாணி இவையெல்லாம் எதுவும் இல்லை. எனவே காய்கறி சந்தையில் மற்ற காய்கறிகளை விட இந்த தக்காளி, வெங்காயத்தை மட்டுமே மக்கள் அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். இதன் காரணமாகவே லாரியில் மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளி சந்தையில் குவிந்து வருகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தை
கடும் பனிபொழிவு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஏற்றம் இறக்கமாக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 5 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிப்பால் மூட்டை மூட்டையாக வெங்காயம் காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. இதனால் வெங்காயத்தை பை நிறைய இல்லத்தரசிகள் வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் 100 ரூபாய்க்கு 4 கிலோ வெங்காயம் கூவி, கூவி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்ன விலை என்ன என்பதை பார்ப்போம்.
காய்கறிகள் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 24 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் உச்சம்
கத்திரிக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பெரிய பூண்டு 350 முதல் 520 விற்பனை
வெண்டைக்காய் ஒரு கிலோ 46 முதல் 51 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 25 முதல் 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும், பெரிய பூண்டு 350 முதல் 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பீர்க்கங்காய் விலை என்ன?
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 முதல் 66 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், மாங்காய் 60 முதல் 80 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 50 முதல் 66 ரூபாய்க்கும், மரவள்ளிக் கிழங்கு 40 முதல் 60 ரூபாக்கும், நூக்கல் 30 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

