MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • AIADMK Vs TVK: நடப்பதை எல்லாம் பார்த்தால்! தமிழக பெண்களை தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் காப்பாற்றணும்! இறங்கி அடிக்கும் இபிஎஸ்!

AIADMK Vs TVK: நடப்பதை எல்லாம் பார்த்தால்! தமிழக பெண்களை தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் காப்பாற்றணும்! இறங்கி அடிக்கும் இபிஎஸ்!

AIADMK: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், ஆளுங்கட்சி நிர்வாகிகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 19 2026, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

திருவாரூர் டவுன் பகுதியை சேர்ந்த 27 வயதான இளம்பெண். உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தவர். நேற்று முன்தினம் இரவு பஸ்சில் புதிய பேருந்து நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக தந்தை வருகைக்காக காத்து இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 நபர்கள், தனியாக நின்ற அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனது தந்தையிடம் கூறி கதறி அழுததாக கூறப்படுகிறது.

Ration Card: ஜூன் 20-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்? மக்களே உடனே கடைக்கு போங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Asianet News

இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆனந்த் (எ) பிரவீன்குமார் (24), அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் நாகப்பட்டினத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரில் 2வது ஆண்டு படித்து வரும் அசோக் (26) என தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தவெக ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

TN Power Cut: சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை.. தமிழகம் முழுவதும் மின்தடை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

Related Articles

Related image1
Tamilnadu Government Jobs: பெண்களுக்கு குட்நியூஸ்.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
Related image2
DMK Vs TVK: பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? திமுக ஐடி விங் காட்டம்! கோபாலபுர கொள்ளைக்காரர்களா நாங்க? தவெக பதிலடி!
35
Image Credit : our own

இந்நிலையில் கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் என இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை.

45
Image Credit : Asianet News

ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல! அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்?

Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?

55
Image Credit : Asianet News

9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா? இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
எடப்பாடி பழனிசாமி
தமிழக வெற்றி கழகம்
டிவி.கே. விஜய்
குற்றம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Govt Schemes: மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
பாஜக பக்கம் சாயும் திமுக? பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க திட்டம்? பரபரக்கும் டெல்லி.! திமுகவின் அடுத்த மூவ் என்ன?
Recommended image3
Now Playing
தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் குறித்த அரசின் நிலைப்பாடு அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!
Related Stories
Recommended image1
Tamilnadu Government Jobs: பெண்களுக்கு குட்நியூஸ்.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
Recommended image2
DMK Vs TVK: பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? திமுக ஐடி விங் காட்டம்! கோபாலபுர கொள்ளைக்காரர்களா நாங்க? தவெக பதிலடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved