இரவோடு இரவாக 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.! புதிய லிஸ்ட் இதோ
தமிழக அரசு 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. டி.ஐ.ஜி மகேஷ் குமார் கடலோர பாதுகாப்பு குழு டி.ஐ.ஜியாகவும், ஜெயந்தி தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு 18 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் டி ஐ ஜி மகேஷ் குமார், கடலோர பாதுகாப்பு குழு டி.ஐ.ஜியாக மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு டிஐஜி யாக இருந்த ஜெயந்தியை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி , தமிழ்நாடு ஆட்சி மற்றும் காகித நிறுவன ஊழல் தடுப்பு விஜிலென்ஸ் டிஐஜியாக மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய கல்யாண் ஐபிஎஸ் தெற்கு மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் டி.ஐ.ஜி பணியாற்றிய திஷா மிட்டல் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் டி.ஐ.ஜியாக பணியாற்றிய உமா ஐபிஎஸ் விழுப்புரம் டி.ஐ.ஜி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற பதிவு பணியாக எஸ் பி ஆக இருந்த நாகஜோதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் எஸ் பி யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்
ஹமாநாட் மான் ஐபிஎஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவலர் பயிற்சி கல்லூரியில் எஸ்பி ஆக பணியாற்றி வந்த லாவண்யா குற்றப்பதிவு பிரிவு எஸ் பி ஆக மாற்றம் செய்தும், சேலம் துணை ஆணையர் கீதா சென்னை தலைமையிட துணை ஆணையாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் தெற்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த வேல்முருகன் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவின் துணை ஆணையராகவும்., திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராக பணியாற்றி சேலம் தலைமையிட துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்பிக்கள், டிஐஜிக்கள் இடமாற்றம்
தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்த பிரபாகர் சென்னை சைபர் கிரைம் எஸ் பி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் எஸ் பி ஆக பணியாற்றி வந்த அருன் கபிலன் தலைமையிட உதவி ஐ.ஜி யாகவும், தேனி மாவட்ட ஏ.எஸ் பி யாக பணியாற்றி வந்த பாலச்சந்திரா ஐபிஎஸ் எஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று சேலம் தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
இரவில் வெளியான அதிகாரிகள் இடமாற்றம்
கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் ஏ.எஸ்.பி ஆக பணியாற்றி வந்த பிரவீன் கௌதம் திருப்பூர் வடக்கு துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரி ஏ.எஸ் பி யாக பணியாற்றி வந்த பிரசன்னகுமார் ஐபிஎஸ் திருநெல்வேலி மேற்குத் துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்