- Home
- Tamil Nadu News
- TNPSC EXAM : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாரா.! தேர்வர்களுக்கு எதிர்பாரா வெளியான சூப்பர் அறிவிப்பு
TNPSC EXAM : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாரா.! தேர்வர்களுக்கு எதிர்பாரா வெளியான சூப்பர் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது. சென்னையில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 14, 2025 முதல் வகுப்புகள் தொடங்கும்.

அரசு பணிக்காக முயற்சிக்கும் இளைஞர்கள்
நாள் தோறும் நவீனமயமாகி வரும் உலகில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. அதே நேரம் பல லட்சத்தில் சம்பளம் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் திடீரென பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கவும் செய்யும். எனவே அதிக சம்பளமாக கிடைதாலும் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தான் தனியார் நிறுவனங்களில் உள்ளது.
அதுவே அரசு வேலை என்றால் கேட்கவா வேண்டும், வார விடுமுறை, மாதம் 1 ஆம் தேதி சம்பளம் என பல சலுகைகளை அள்ளிக்கொடுக்கும். இதன் காரணமாகவே கஷ்டப்பட்டு தேர்வு எழுது வெற்றி பெற்றால் போதும் அரசு பணியில் கடைசி காலம் வரை நிம்மதியாக இருக்கலாம். எனவே அரசு பணிக்காக தேர்வர்கள் இரவு பகல் பாராமல் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் பயிற்சி வகுப்பானது நடத்தப்படவுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணியிடங்களுக்கு பணியாளர்கள் நிரப்பப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதில் குரூப் 2க்கு 50, குரூப் 2ஏக்கு 595 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணியானது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல்,
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு பயிற்சி
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனில் போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
பயிற்சி வகுப்பிற்கான தேதி
இப்பொருள் தொடர்பில், TNPSC Group II மற்றும் IIA முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பானது மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.07.2025 அன்று முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திங்கள் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் நடத்தப்படவுள்ளது.
எனவே, TNPSC Group II & IIA முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இப்பயிற்சி மாணவர்கள் வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் திரு.பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்கண்ட முகவரியில் நேரில் அணுகவும்:
அலுவலக முகவரி:
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
A-28, முதல் தளம், டான்சி கட்டிடம்,
திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை- 32.
தொலைபேசி எண்: 044-22500134, 9361566648