MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாட்டுக்கோழி வளர்க்க மானியம்.! கை நிறைய சம்பாதிக்க பெண்களுக்கான சூப்பர் திட்டம்.. விண்ணப்பிப்பது எப்படி.?

நாட்டுக்கோழி வளர்க்க மானியம்.! கை நிறைய சம்பாதிக்க பெண்களுக்கான சூப்பர் திட்டம்.. விண்ணப்பிப்பது எப்படி.?

தமிழக அரசு கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு 40 அசில் இனக்கோழிக்குஞ்சுகள் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 11 2026, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மகளிருக்கான திட்டம்
Image Credit : tndipr

மகளிருக்கான திட்டம்

மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பயணம் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருமண நிதி உதவித் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவி திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

26
நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்
Image Credit : SCH

நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்

மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களது சொந்த காலில் நிற்கும் வகையில் மானிய திட்டத்தில் கடனுதவி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பெண்களுக்காக நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Related image1
வரும் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? ஆசிரியர்களுக்கு ட்விஸ்ட்!
Related image2
தமிழகத்தில் நேற்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்.! சென்னை மக்களுக்கு வானிலை கொடுத்த எச்சரிக்கை!
36
 50% மானியம்
Image Credit : Asianet News

50% மானியம்

இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசு சார்பாக நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற ஏழை விதவைகள், கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களின் மேம்பாட்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நான்கு வார வயதுடைய 40 அசில் இனக்கோழிக்குஞ்சுகளை கொள்முதல் செய்ய 50% மானியம் வழங்கப்படும்.

46
செயல்படுத்தப்படும் இடம்
Image Credit : Asianet News

செயல்படுத்தப்படும் இடம்

38,000 பெண்கள் பயன்

இந்த நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 38,000 கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

செயல்படுத்தப்படும் இடம்

சென்னையை தவிர (புனித தோமையார் மலை) அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 100 பயனாளிகள் என திட்டம் செயல்படுத்தப்படும்.

56
தகுதி அளவுகோல்கள்
Image Credit : Asianet News

தகுதி அளவுகோல்கள்

பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளி 50% பங்களிப்புத் தொகையான ரூ.1600 வழங்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30% பேர் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

66
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Asianet News

விண்ணப்பிக்கும் முறை

* முதல்வர் முகாம் மூலம் மக்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

* அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் அல்லது கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண்கள்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாரு உங்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது.. சந்தீப் மிட்டல் RSS ஆதரவாளர்.. ஆதாரத்துடன் உண்மையை போட்டுடைத்த TR பாலு
Recommended image2
கும்பமேளா புகழ் மோனாலிசா கணவர் மீது போக்சோ வழக்கு.. விரைவில் கைதாகிறார்? நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Recommended image3
Now Playing
விஜய்கு வெற்றி விநாயகர் பரிசளித்த வேட்பாளர்.. கோட்டையில் இனி தளபதி கச்சேரி...
Related Stories
Recommended image1
வரும் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? ஆசிரியர்களுக்கு ட்விஸ்ட்!
Recommended image2
தமிழகத்தில் நேற்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்.! சென்னை மக்களுக்கு வானிலை கொடுத்த எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved