MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வரும் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? ஆசிரியர்களுக்கு ட்விஸ்ட்!

வரும் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? ஆசிரியர்களுக்கு ட்விஸ்ட்!

School Student: தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 45 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 10 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்தது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

26
Image Credit : our own

ஏப்ரல் 25ம் தேதி வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி/யூ.கே.ஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து, விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலைக் கல்வி தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

Related Articles

Related image1
சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்
Related image2
ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை.. இவர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது!
36
Image Credit : Google

2026-27ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் ஜூன் 01ம் தேதி திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

46
Image Credit : our own

வரும் கல்வியாண்டு முதல் 1-3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிய பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இவ்வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3 வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. எனவே, 1-3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 04 (வியாழன் கிழமை) அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

56
Image Credit : Getty

முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க பெற உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை கோடை விடுமுறை 45 கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர். பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் தினத்திலேயே விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

66
Image Credit : our own

இதனிடையே இந்த ஆண்டு எலினோ உருவாகக்கூடிய ஆண்டாக இருப்பதன் காரணமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒருவேளை வெயிலின் தாக்கம் மே மாதம் இறுதியில் அதிகமாக இருந்தால், இதுகுறித்து மறுபரிசீலனை செய்து பள்ளி திறப்பு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி
பள்ளிகள் விடுமுறை
விடுமுறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ
Recommended image2
கூட்டம் அலைமோதுகிறது... ஓட்டு விழுமா? விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 தேர்தல்!
Recommended image3
Puducherry Election: 91%-ஐ கடந்த வாக்குப்பதிவு..! வரலாறு படைத்த புதுச்சேரி..!
Related Stories
Recommended image1
சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்
Recommended image2
ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை.. இவர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved