MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

ஜாமீன் நிபந்தனைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை, சென்னை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். சித்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த அவரை, அவரது தோழியுடன் போலீசார் கைது செய்தனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 09 2026, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : HT

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றம் உத்தரவுப்படி 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கருக்கு உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

26
Image Credit : our own

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி வீடியோக்களை பதிவிடுவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Articles

Related image1
வரிசைக்கட்டி வரும் விடுமுறை.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!
Related image2
காலையில் மண்டையை பிளக்கும் வெயில்... மாலையில் வெளுத்து வாங்கும் கனமழை.. வானிலை மையம் சூப்பர் அப்டேட்
36
Image Credit : chennai high court

இதுதொடர்பான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக தெரியவந்தால் அவரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி சவுக்கு சங்கர் தாயார் மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

46
Image Credit : our own

சவுக்கு சங்கர் இடைக்கால ஜாமீன் முடிவதால், அவர் சரணடைய வேண்டும் எனவும் இல்லையென்றால் அவர் மீது போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மார்ச் 25ம் தேதிக்கு பிறகு நீதி​மன்​றத்​தில் சரணடைய வேண்​டிய சவுக்கு சங்​கர் தலைமறை​வாக இருந்து வந்தார். அதே நேரத்தில் யூடியூப்பில் வீடியோக்களை தொடர்ந்து சவுக்கு சங்கர் பதிவிட்டு வந்தார்.

56
Image Credit : our own

இந்​நிலை​யில் தன் மீதான 2 வழக்​கு​களை​யும் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சவுக்கு சங்​கர் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி நிர்​மல்​கு​மார் முன்​பாக நேற்று முன்​தினம் விசாரணைக்கு நடந்​தது. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் சவுக்கு சங்​கர் தொடர்ந்து தலைமறை​வாக இருந்து வரு​வ​தால் அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து சென்னை போலீ​சார் தேடி வரு​வ​தாக தெரிவித்​தார். மேலும் சிபிஐ விசா​ரணை கோரும் 2 வழக்​கு​களி​லும் ஏற்​கெனவே விசா​ரணை முடிக்​கப்​பட்டு குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டு​விட்​ட​தாக​வும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ழக்கு விசா​ரணையை வரும் ஏப்​ரல் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

66
Image Credit : Asianet News

இது ஒரு​புறம் இருக்க தலைமறை​வான சவுக்கு சங்​கரை தனிப்​படை அமைத்து சென்னை போலீ​சார் தீவிரமாக தேடி வந்​தனர். இந்​நிலை​யில், சவுக்கு சங்கர் ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு லாட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்​து, ஆந்திரா விரைந்த சென்னை போலீ​சார் சவுக்கு சங்​கரை கைது செய்​தனர். அவருடன் தங்​கி​யிருந்த அவரது தோழி மால​தி​யும் கைது செய்​யப்​பட்​டார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Puducherry Elections: புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு! NDA, INDIA, தவெக இடையே மும்முனைப் போட்டி!
Recommended image2
அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்.. சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்
Recommended image3
TN Election 2026: ஒரே குடும்பம்.. ரூ.5,800 கோடி சொத்து - தமிழக தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையா? மலைக்க வைக்கும் பின்னணி!
Related Stories
Recommended image1
வரிசைக்கட்டி வரும் விடுமுறை.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!
Recommended image2
காலையில் மண்டையை பிளக்கும் வெயில்... மாலையில் வெளுத்து வாங்கும் கனமழை.. வானிலை மையம் சூப்பர் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved