MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் நேற்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்.! சென்னை மக்களுக்கு வானிலை கொடுத்த எச்சரிக்கை!

தமிழகத்தில் நேற்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்.! சென்னை மக்களுக்கு வானிலை கொடுத்த எச்சரிக்கை!

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து, 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 10 2026, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
நேற்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்
Image Credit : Asianet News

நேற்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் - 104 டிகிரியும், வேலூர் - 103, ஈரோடு - 102, மதுரை விமான நிலையம் - 101, திருச்சி - 100, நாமக்கல் - 100, தருமபுரி - 100, மதுரை நகரம் - 100, பாளையங்கோட்டை - 100, சென்னை மீனம்பாக்கம் - 100, திருப்பத்தூர் - 100 வெயில் பதிவானது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை
Image Credit : Asianet News

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை

அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒடிசாவின் உட்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கர், தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

37
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை
Image Credit : Google

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை

இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களான தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

47
டெல்டா மாவட்டங்களில் மழை
Image Credit : our own

டெல்டா மாவட்டங்களில் மழை

ஏப்ரல் 12 தென் தமிழகம். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் ஏப்ரல் 13 மற்றும் 14ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

57
லேசான மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

லேசான மழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 15 மற்றும் 16ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

67
வெப்பம் அதிகரிக்கும்
Image Credit : our own

வெப்பம் அதிகரிக்கும்

இன்று முதல் 14 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.

77
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : ANI

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் வரும் நாட்களில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை
கோடைக்காலம்
வானிலை அறிக்கை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி
Recommended image2
Now Playing
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
Recommended image3
Now Playing
மாற்றுத்திறனாளிகள் தின விழா : காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கிய விஜய் பாலாஜி!
Related Stories
Recommended image1
வரும் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? ஆசிரியர்களுக்கு ட்விஸ்ட்!
Recommended image2
2015-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்றை கடைசி நாள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved