- Home
- Tamil Nadu News
- தொடர் விடுமுறை.! கோவை, நெல்லைக்கு சுற்றுலா செல்ல திட்டமா.? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே
தொடர் விடுமுறை.! கோவை, நெல்லைக்கு சுற்றுலா செல்ல திட்டமா.? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே
Continuous holidays : பள்ளி காலாண்டு தேர்வு மற்றும் பூஜை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன,

தொடர் விடுமுறை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு நாளை மறு தினத்தோடு முடிவடையவுள்ளது. இதனையடுத்து தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல ஆயுத பூஜை மற்றும் சரஸ்வரதி பூஜை விடுமுறையானது வரவுள்ளது. இந்த நாளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைக்கவுள்ளது.
எனவே இந்த விடுமுறை நாளையொட்டி உறவினர்கள் வீட்டிற்கு செல்லவும், சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் சிறப்பு ரயில் விடப்படுமா என காத்திருந்தனர்.
சிறப்பு ரயில் அறிவிப்பு
அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் பூஜை திருவிழாவை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அதிகப்படியாக இருப்பதை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே, வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்களை இயக்குகிறது:
கோயம்புத்தூர் முதல் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் வரை கோயம்புத்தூர் வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு சிறப்பு ரயில்
ரயில் எண் 06034 (கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல்):
புறப்படும் நேரம்: இரவு 23.30 மணி
தேதிகள்: 28 செப்டம்பர், 05 & 12 அக்டோபர் 2025 (ஞாயிற்றுக்கிழமை)
சென்று சேரும் நேரம்: மறுநாள் காலை 08.30 மணி
ரயில் எண் 06033 (சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர்):
புறப்படும் நேரம்: காலை 10.15 மணி
தேதிகள்: 29 செப்டம்பர், 06 & 13 அக்டோபர் 2025 (திங்கட்கிழமை)
சென்று சேரும் நேரம்: அதே நாளில் மாலை 18.35 மணி
இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
முக்கிய நிறுத்தங்கள் & நேரங்கள் (06034 / 06033):
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்ட்ரல்
பயணிகள் வசதிக்கான பெட்டிகள்:
7 – ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள்
4 – ஏசி மூன்று அடுக்கு எகனாமி பெட்டிகள்
5 – ஸ்லீப்பர் பெட்டிகள்
இந்த சிறப்பு ரயிலுக்கானமுன்பதிவு இன்று காலை முதல் தொடங்கவுள்ளது. இதே போல ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.