- Home
- Tamil Nadu News
- அடுத்த 3 மணிநேரம்! தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்! வானிலை மையம் அலர்ட்!
அடுத்த 3 மணிநேரம்! தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்! வானிலை மையம் அலர்ட்!
Tamilnadu Rain: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை எப்போது கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே மழை பெய்யும் என்பார்கள். மேலும் கேரளாவை ஓட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வழக்கம். ஆனால் இம்முறை தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து அடுத்து ஏரி, குளங்களின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து தமிழகத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
5 மாவட்டங்களில் மழை
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.