1000 யூனிட் வரை இலவச மின்சாரம்.! அசத்தும் தமிழக அரசு- குஷியில் தொழிலாளர்கள்
Free electricity for power loom workers : தமிழக அரசு விசைத்தறி நுகர்வோர்களுக்கான கட்டணமில்லா மின்சார வரம்பை 750 யூனிட்டிலிருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தியுள்ளது. 1.37 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன் அடைகின்றனர்.

தமிழக அரசின் மின்சார திட்டம்
தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாறி வரும் காலத்தில் மின்சார பயன்பாடு கட்டாய தேவையாக உள்ளது. எனவே எந்த வேலை செய்வதாக இருந்தாலும் மின்சாரம் முக்கிய தேவையாகும். இதனால் மின்சார கட்டணம் பல மடங்கு ஒவ்வொரு வீட்டிலும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் தமிழக அரசு மக்களுக்கு உதவிடும் வகையில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு, தமிழ்நாடு மின் வாரியம் 100 யூனிட் வரை இலவச மின்சாரத்தை வழங்குகிறது. விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது
விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம்
இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முக்கியமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள விசைத்தறி நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சார வரம்பு 750 யூனிட்டிலிருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் இரண்டு மாத மின் பில்லிங் காலத்திற்கு பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 1,37,512 விசைத்தறி நுகர்வோர்கள் நேரடியாகப் பயனடைகிறார்கள்.
1,37,512 விசைத்தறி நுகர்வோர்கள் பயன்
விசைத்தறி தொழில் மாநிலத்தின் முக்கிய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக இருந்து பல லட்சம் குடும்பங்களுக்கு வாழ்க்கைத் தளத்தை வழங்கி வருகிறது. மின்சாரம் இவர்களுக்கான முக்கியமான உற்பத்தி மூலமாக இருப்பதால், கட்டணமில்லா மின்சார வரம்பை உயர்த்துவது அவர்களின் பொருளாதார சுமையை குறைத்து உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று அரசு நம்புகிறது.
விசைத்தறி தொழிலாளர்களுக்கு பயன்
TANGEDCO வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாநில அரசு வழங்கும் இத்தகைய உதவிகள், அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதோடு, மாநிலத்தின் பாரம்பரிய தொழில்கள் வளர்ச்சிக்கும் புதிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி மூலம் தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் நலனில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.