MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Onion Garlic Price Hike : சின்ன வெங்காயம், பூண்டு விலை கிடுகிடு உயர்வு..தனி பட்ஜெட் போடணுமா? அமைச்சர் சொன்ன முக்கியத் தகவல்

Onion Garlic Price Hike : சின்ன வெங்காயம், பூண்டு விலை கிடுகிடு உயர்வு..தனி பட்ஜெட் போடணுமா? அமைச்சர் சொன்ன முக்கியத் தகவல்

Onion Garlic Price Hike: தமிழகத்தில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.250 வரையிலும், பூண்டு ரூ.320 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மழையால் வரத்து குறைந்ததே விலை உயர்வுக்குக் காரணம். விலை குறைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

3 Min read
Author : Vishnupriya
Published : Nov 18 2026, 04:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சின்ன வெங்காயம், பூண்டு விலை கிடுகிடு உயர்வு
Image Credit : This is a representative image generated using Gemini AI

சின்ன வெங்காயம், பூண்டு விலை கிடுகிடு உயர்வு

சாம்பார் வைக்க சின்ன வெங்காயம், ரசம் வைக்க பூண்டு என அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத பொருட்களாக இருக்கும் இவை இரண்டும் இப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளன.

ஏற்கெனவே காய்கறிகள், மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் திணறி வரும் நிலையில், சின்ன வெங்காயத்தின் விலையும், பூண்டின் விலையும் ஒரே நேரத்தில் அதிரடிய்யாக உயர்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம்? இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும்? இதுகுறித்து அமைச்சர் வெங்கடரமணன் என்ன விளக்கம் அளித்துள்ளார் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
வெங்காயம் விலை
Image Credit : This is a representative image generated using Gemini AI

வெங்காயம் விலை

சின்ன வெங்காயம் விலை எவ்வளவு?

தமிழகத்தின் அன்றாட உணவுப் பழக்கத்தில் சின்ன வெங்காயத்திற்கு தனி இடம் உண்டு. சாம்பார், காரக்குழம்பு, வெங்காய சட்னி, வறுவல் எனப் பல உணவுகளிலும் சின்ன வெங்காயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், தற்போது அதன் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோயம்பேடு சந்தை நிலவரத்தின்படி,

  • முதல் ரக சின்ன வெங்காயம் கிலோ ரூ.220.
  • இரண்டாம் ரக சின்ன வெங்காயம் கிலோ ரூ.200.
  • மூன்றாம் ரக சின்ன வெங்காயம் கிலோ ரூ.170.
  • சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.210 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த வாரம் மொத்த விற்பனைச் சந்தையில் கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கணிசமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் அரை கிலோ சின்ன வெங்காயம் வாங்குவதற்கே ரூ.100 க்கும் மேல் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

36
பூண்டு
Image Credit : This is a representative image generated using Gemini AI

பூண்டு

பூண்டு விலை

சின்ன வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டின் விலையும் அதிகமாகவே உள்ளது. சமையலில் சுவைக்காக மட்டுமின்றி, பல்வேறு பாரம்பரிய உணவுகளிலும் பயன்படுத்தப்படும் பூண்டு தற்போது கிலோ ரூ.230 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

46
எதனால் இந்த திடீர் விலை உயர்வு?
Image Credit : This is a representative image generated using Gemini AI

எதனால் இந்த திடீர் விலை உயர்வு?

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகத் தொடர் மழை மற்றும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவு கூறப்படுகிறது.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைச்சல்

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெய்து வரும் தொடர் மழையால் சின்ன வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக அறுவடைப் பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சந்தைக்கு வரும் வரத்து குறைவு

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் சுமார் 20 லாரிகளில் வந்து கொண்டிருந்த சின்ன வெங்காயத்தின் வரத்து தற்போது 10 முதல் 12 லாரிகளாகக் குறைந்துள்ளது. இதனால் தேவைக்கும் வரத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.

தேவை அதிகம், வரத்து குறைவு

அன்றாட சமையலில் சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் தேவை தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் சந்தைக்கு வரும் அளவு குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

56
அமைச்சர் வெங்கடரமணன் கூறியது
Image Credit : This is a representative image generated using Gemini AI

அமைச்சர் வெங்கடரமணன் கூறியது

விலை உயர்வு குறித்து அமைச்சர் வெங்கடரமணன் கூறியது என்ன?

சின்ன வெங்காயம், பூண்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மழைக்காலங்களில் வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். தற்போது உயர்ந்துள்ள விலைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இன்னும் 15 நாட்களுக்குள் விலைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய வாய்ப்புள்ளது.

எந்தெந்தப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளதோ, அவற்றைக் கண்காணித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேவையான பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அரசு ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

66
எப்போது குறையும் சின்ன வெங்காயம், பூண்டு விலை?
Image Credit : This is a representative image generated using Gemini AI

எப்போது குறையும் சின்ன வெங்காயம், பூண்டு விலை?

தற்போதைய விலை உயர்வுக்கு மழைப்பொழிவு மற்றும் விளைச்சல் பாதிப்பு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. எனவே, மழையின் தாக்கம் குறைந்து அறுவடை சீராகி, சந்தைக்கு வரும் வரத்து அதிகரித்தால் விலையும் குறைய வாய்ப்புள்ளது.

அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளபடி, அடுத்த 15 நாட்களில் படிப்படியாக விலை குறையுமா என்பதைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.250 வரையிலும், பூண்டு கிலோ ரூ.320 வரையிலும் விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளின் குடும்ப பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அரசு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
வெங்காயம்
கோடையில் பூண்டு நுகர்வு
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்.! 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு.. எந்தெந்த மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்?
Recommended image2
AIADMK Strategy: இடைத்தேர்தல் வந்தால் யார் போட்டியிடுவார்கள்..? வெற்றிக்காக வேட்பாளரைத் தேடும் அதிமுக.?
Recommended image3
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 150 ஆண்டுகால வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!
Related Stories
Recommended image1
Anbil Mahesh Case: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நீதிமன்றக் காவல் டிசம்பர் 2 வரை நீட்டிப்பு! வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை
Recommended image2
Divya Sathyaraj: பெருந்துறையில் திமுக வேட்பாளராக திவ்யா சத்யராஜ்? ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved