MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 150 ஆண்டுகால வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 150 ஆண்டுகால வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Nov 18 2026, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு எதிர்ப்பு
Image Credit : Asianet News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு எதிர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பின்னணி & உயர் நீதிமன்றத் தீர்ப்பு
Image Credit : Asianet News

பின்னணி & உயர் நீதிமன்றத் தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கார்த்திகை தீபத் திருவிழாவன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

இதற்கு எதிராகத் திருக்கோவில் நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.

34
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வாதம்
Image Credit : our own

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வாதம்

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், காவல்துறை மற்றும் தொல்லியல் துறையின் நிபந்தனைகளை எதிர்த்து ராம ரவிக்குமார் தரப்பிலும், திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து தீபத்தூணில் அணையா விளக்கு ஏற்றவும், பாதுகாப்பிற்காக மத்திய ரிசர்வ் காவல் படையை (CRPF) பணியமர்த்தவும் கோரி இந்து தர்ம பரிஷத் அமைப்பின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் ஆகியோர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்;

24-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், குன்றின் உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை. 150 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகள் மற்றும் ஸ்தானிகர்களின் ஆலோசனையின்படி, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே கோவில் நிர்வாகத்தால் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

1923-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் லண்டன் பிரிவி கவுன்சில் உத்தரவின்படி, நெல்லித்தோப்பு பகுதி, பள்ளிவாசல் செல்லும் படிகள், மலை உச்சியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் கொடிக்கம்பம் அமைந்துள்ள பாறை ஆகிய இடங்களைத் தவிர்த்து, ஒட்டுமொத்த மலையும் கோவிலுக்குச் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் கோவில் நிர்வாகத்தைத் தொல்லியல் துறை கையகப்படுத்த முடியாது என்றும், தனியார் அமைப்புகளுக்கு இதில் எவ்வித உரிமையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படக்கூடும் என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

44
மனுதாரர்கள் மற்றும் அரசியல் விமர்சனங்கள்
Image Credit : Asianet News

மனுதாரர்கள் மற்றும் அரசியல் விமர்சனங்கள்

மறுபுறம், பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தீபத்தூணில் பக்தர்கள் அமைதியான முறையில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த விவகாரத்தில் மௌனம் காத்த தற்போதைய ஆளும் தரப்பு, தற்போது ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த அதே தவறைத் தற்போதைய அரசும் செய்வதாகவும் சமூக வலைதளங்களிலும் அரசியல் தளத்திலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
திருப்பரங்குன்றம்
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(37.2 ov)121/3
SLSL
98
Day 1
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Akvan: ருத்ரதாண்டவம் ஆடப்போகும் 'அக்வான்' புயல்.. காத்திருக்கும் அதிர்ச்சி; வெளியான அப்டேட்!
Recommended image2
Divya Sathyaraj: பெருந்துறையில் திமுக வேட்பாளராக திவ்யா சத்யராஜ்? ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன?
Recommended image3
இன்று மின்தடை அறிவிப்பு.. சென்னை முதல் கோவை வரை எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்?
Related Stories
Recommended image1
Cyclone Akvan: ருத்ரதாண்டவம் ஆடப்போகும் 'அக்வான்' புயல்.. காத்திருக்கும் அதிர்ச்சி; வெளியான அப்டேட்!
Recommended image2
Divya Sathyaraj: பெருந்துறையில் திமுக வேட்பாளராக திவ்யா சத்யராஜ்? ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved