- Home
- Tamil Nadu News
- இன்று மின்தடை அறிவிப்பு.. சென்னை முதல் கோவை வரை எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்?
இன்று மின்தடை அறிவிப்பு.. சென்னை முதல் கோவை வரை எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்?
Tamil Nadu Power Cut November 18 2026: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 18) துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பல மாவட்டங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. உங்கள் பகுதி இருக்கிறதா? பார்க்கலாம்.

இன்றைய (நவம்பர் 18) மின்தடை
வீட்டில் தண்ணீர் மோட்டார் இயக்குவது, துணி துவைப்பது, சமையல் வேலைகள் என மின்சாரத்தைச் சார்ந்த அன்றாடப் பணிகள் ஏராளம். இதுபோன்ற வேலைகளைச் செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் இன்றைய மின்தடை அறிவிப்பைக் கவனிப்பது அவசியம். தமிழ்நாட்டின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நவம்பர் 18ஆம் தேதி பல மாவட்டங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. உங்கள் பகுதியும் இதில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
சென்னை
சென்னையில் பல்லாவரம் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஇ நிறுவனம், ராணுவக் குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் விமான உணவுத் தயாரிப்பு நிறுவனம், பிபிசிஎல், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பராமரிப்புப் பணிகள் முன்கூட்டியே முடிந்தால் மின்சாரம் அதற்கு முன்பே வழங்கப்படலாம். எனவே, இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மின்சாரத்தைச் சார்ந்த முக்கிய வேலைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்வது நல்லது.
Top 5 Richest Districts: தமிழ்நாட்டின் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் இவைதான்.. முழு லிஸ்ட் இதோ!
கோவை
கோவை மாவட்டத்தில் காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர். பாளையம், வில்லாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், லட்சுமி நகர், முருகன் நகர், செங்காளியப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகள் மின்தடை அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும் கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டியின் சில பகுதிகள், விஸ்வாசபுரம், சிவானந்தபுரம், சத்தி சாலை மற்றும் ரவி தியேட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின்விநியோகம் பாதிக்கப்படலாம்.
கிருஷ்ணகிரி, திண்டுக்கல்
கிருஷ்ணகிரியில் சிம்மனபுதூர், கீழ்மாத்தூர், ஏ.கே. மோட்டார், ஜமனபுத்தூர், தம்மனபுத்தூர், பொம்மிக்குப்பம், திப்பம் சமுத்திரம், செளந்தம்பள்ளி, வீஷ்மங்கலம் உள்ளிட்ட பகுதிகள் பட்டியலில் உள்ளன. திண்டுக்கல்லில் பாப்பம்பட்டி, சித்தரேவு, எரவிமங்கலம், ஆண்டிப்பட்டி, கணக்கன்பட்டி, சத்திரப்பட்டி, நிலக்கோட்டை, நூத்தலபுரம், பொருளூர், கே.கீரனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப், சுருளிப்பட்டி, தேனி, உப்பார்பட்டி, குன்னூர், சிலமலை உள்ளிட்ட இடங்களும், தஞ்சாவூரில் சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
உடுமலைப்பேட்டை, வேலூர்
உடுமலைப்பேட்டையில் இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், போல்ட்ராபட்டி, கே.கே. புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படலாம். வேலூரில் எம்ஆர்எஃப் நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம், பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், தொரப்பாடி உள்ளிட்ட இடங்களும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. இன்று மின்தடை ஏற்படுவதற்கு முன்பாக கைப்பேசிகளை சார்ஜ் செய்து வைப்பதுடன், மின்சாதனங்களையும் பாதுகாப்பாக அணைத்து வைப்பது நல்லது. அந்தந்தப் பகுதிகளுக்கான மின்வாரிய அறிவிப்புகளையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.









