MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Anbil Mahesh Case: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நீதிமன்றக் காவல் டிசம்பர் 2 வரை நீட்டிப்பு! வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை

Anbil Mahesh Case: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நீதிமன்றக் காவல் டிசம்பர் 2 வரை நீட்டிப்பு! வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை

Anbil Mahesh Case : முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முறைகேடு புகார், கைது பின்னணி, போலீஸ் விசாரணை, ஜாமீன் மனு குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

3 Min read
Author : Vishnupriya
Published : Nov 18 2026, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ன்பில் மகேஸ் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
Image Credit : @Anbil_Mahesh - x page and https://hcmadras.tn.gov.in site

ன்பில் மகேஸ் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்பான வழக்கில், அவரது நீதிமன்றக் காவல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டதா? இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? முறைகேடு புகாரின் பின்னணி என்ன? அன்பில் மகேஸ் எப்போது கைது செய்யப்பட்டார்? அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதா? தற்போது நீதிமன்றத்தில் என்ன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அன்பில் மகேஸ் நீதிமன்றக் காவல் டிசம்பர் 2 வரை நீட்டிப்பு
Image Credit : https://hcmadras.tn.gov.in site

அன்பில் மகேஸ் நீதிமன்றக் காவல் டிசம்பர் 2 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவல் இன்றுடன் நவம்பர் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் அன்பில் மகேஸ் தொடர்ந்து புழல் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றம்: சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்.

நீதிபதி: எல்.எஸ். சத்தியமூர்த்தி.

உத்தரவு: டிசம்பர் 2, 2026 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு.

ஆஜரான முறை: புழல் மத்திய சிறையிலிருந்து காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

35
வழக்கின் பின்னணி என்ன?
Image Credit : @Anbil_Mahesh - x page

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, அங்கீகாரத்தைப் புதுப்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.

குறிப்பாக, 1,000 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்ட பின்னணி

இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த அக்டோபர் 26 அன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு முன்னதாகவே அவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பணப்பரிமாற்றம், தொடர்புடைய நபர்கள் மற்றும் சொத்துகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

45
இந்த வழக்கில் யார் யாருக்குத் தொடர்பு?
Image Credit : pinterest

இந்த வழக்கில் யார் யாருக்குத் தொடர்பு?

அன்பில் மகேஸ் மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமார் ஆகிய பெயர்களும் வழக்கில் இடம்பெற்றுள்ளன.

இந்த வழக்கில் யார் யாரிடம் பணம் வசூலித்தார்கள், பணம் எங்கு சென்றது, யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

55
அன்பில் மகேஸிடம் போலீஸ் விசாரணை – 3 நாட்கள் காவல்
Image Credit : pinterest

அன்பில் மகேஸிடம் போலீஸ் விசாரணை – 3 நாட்கள் காவல்

அன்பில் மகேஸை கைது செய்த பின்னர், அவரிடம் கூடுதல் விசாரணை நடத்த போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். குறிப்பாக, பணப்பரிமாற்றம் தொடர்பான விவரங்கள், தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரின் தொடர்புகள், சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை விசாரிக்க வேண்டியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து அன்பில் மகேஸிடம் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவடைந்த பின்னர் நவம்பர் 4-ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜாமீன் மனுவில் என்ன நடந்தது?

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அன்பில் மகேஸ் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் விசாரணையின் தற்போதைய நிலை உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு பதிலளிக்க உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தது. அதன்படி அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அரசியல்
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
(23.0 ov)108/3
ENGENG
328
AUS need 221 runs in 162 balls
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(87.0 ov)320/9
SLSL
98
Day 2 - Session 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
AIADMK Strategy: இடைத்தேர்தல் வந்தால் யார் போட்டியிடுவார்கள்..? வெற்றிக்காக வேட்பாளரைத் தேடும் அதிமுக.?
Recommended image2
Divya Sathyaraj: பெருந்துறையில் திமுக வேட்பாளராக திவ்யா சத்யராஜ்? ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன?
Recommended image3
Arogara Controversy : முதலமைச்சருக்கு அரோகரா.. திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் எழுந்த சர்ச்சை! காவல் ஆணையரிடம் இந்து முன்னணி நிர்வாகி பரபரப்பு புகார்!
Related Stories
Recommended image1
Voter Registration Camp : வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? உங்களுக்காக வருகிறது சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்!
Recommended image2
Annan Seer Scheme : அண்ணன் சீர் திட்டம்..8 கிராம் தங்கம், பட்டுப்புடவை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved