MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Annan Seer Scheme : அண்ணன் சீர் திட்டம்..8 கிராம் தங்கம், பட்டுப்புடவை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

Annan Seer Scheme : அண்ணன் சீர் திட்டம்..8 கிராம் தங்கம், பட்டுப்புடவை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

Annan Seer Scheme : தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கப்படுகிறது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், வருமான வரம்பு, ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.

4 Min read
Author : Vishnupriya
| Updated : Nov 17 2026, 07:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
அண்ணன் சீர் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit : @TNDIPRNEWS

அண்ணன் சீர் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம், கூடவே அழகான பட்டுப்புடவை. திருமணச் செலவுகளால் சிரமப்படும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'அண்ணன் சீர்' திட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

ஒரு பெண்ணின் திருமணத்தை முன்னிட்டு, குடும்பத்திற்கு ஆதரவாக அண்ணன் செய்யும் சீர்வரிசையைப் போலவே, அரசே முன்வந்து மணப்பெண்ணுக்கு தங்கமும் பட்டுப்புடவையும் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற அனைவருக்கும் வாய்ப்பு உள்ளதா? குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்? திருமணத்திற்கு எத்தனை நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்? ஆதார் மற்றும் குடும்ப அட்டை கட்டாயமா? விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் எது? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், அண்ணன் சீர் திட்டத்திற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள், தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்களைப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
அண்ணன் சீர் திட்டம் என்றால் என்ன?
Image Credit : This is a representative image generated using Gemini AI

அண்ணன் சீர் திட்டம் என்றால் என்ன?

தமிழகத்தில் திருமணமாகும் தகுதியுள்ள பெண்களுக்கு அரசின் சார்பில் திருமண சீர்வரிசை வழங்கும் திட்டமே அண்ணன் சீர் திட்டம். இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய மணப்பெண்களுக்கு,

  • 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம்
  • ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும்.


இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

38
முக்கிய தகுதிகள்
Image Credit : This is a representative image generated using Gemini AI

முக்கிய தகுதிகள்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 

  • அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி,
  • மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் குறைந்தபட்ச சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  • மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • திருமண நிதியுதவி வழங்கும் பிற அரசுத் திட்டங்களின் கீழ் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.


முக்கியம்: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருப்பது கட்டாயம். தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் வருமான வரம்பு, திட்டத்தின் அரசாணையில் ரூ.2.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

48
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
Image Credit : This is a representative image generated using Gemini AI

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

அரசு வெளியிட்டுள்ள பொருளாதாரத் தகுதி நிபந்தனைகளின்படி,

  • ரூ.2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டி வருமான வரி தாக்கல் செய்யும் குடும்பங்கள்.
  • ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள்.
  • சொந்தப் பயன்பாட்டிற்காக நான்கு சக்கர வாகனம் வைத்துள்ள குடும்பங்கள்.
  • 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
  • 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
  • ஆண்டுக்கு 3,600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
  • அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பங்கள்.
  • ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தவிர மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் குடும்பங்கள்.
  • ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் நிறுவனத்தினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்.
  • பிற அரசுத் துறைகள் அல்லது வாரியங்களின் திருமண நிதியுதவித் திட்டங்களில் ஏற்கெனவே பயன் பெற்றவர்கள்.


எனவே, வருமான வரம்பு மட்டுமின்றி, குடும்பத்தின் வாகனம், நிலம், மின்சாரப் பயன்பாடு உள்ளிட்ட விவரங்களும் தகுதி சரிபார்ப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

58
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
Image Credit : This is a representative image generated using Gemini AI

எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு திருமணத் தேதியை அடிப்படையாகக் கொண்டு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து விண்ணப்பிக்கலாம்.
  • திருமண நாள் வரையிலும் விண்ணப்பிக்க அனுமதி உண்டு.
  • 05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான திருமணங்களுக்கு 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.


கவனிக்க வேண்டியது: 2026 அக்டோபர் 5 முதல் 2027 ஜனவரி 15 வரை திருமணம் நடைபெற உள்ளவர்களுக்கு சிறப்புக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற திருமணங்களுக்கு 60 நாட்களுக்கு முன்பு முதல் திருமண நாள் வரை விண்ணப்பிக்கும் நடைமுறை பொருந்தும்.

அண்ணன் சீர்

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை !

தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு !

#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |

@imrajmohan | https://t.co/Clc4geebtQ

— TN DIPR (@TNDIPRNEWS) November 17, 2026

68
அண்ணன் சீர் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit : This is a representative image generated using Gemini AI

அண்ணன் சீர் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள மணப்பெண்கள் இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம்.

  • அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
  • தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இ-சேவை இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளம்:  tnesevai.tn.gov.in

விண்ணப்பிக்கும் நடைமுறை

1. முதலில் இ-சேவை மையம் அல்லது இணையதளத்தை அணுக வேண்டும்.

2. அண்ணன் சீர் திட்டத்திற்கான விண்ணப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

3. மணப்பெண்ணின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும்.

4. கேட்கப்படும் விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

5. திருமண அழைப்பிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் தகுதிகள் சரிபார்க்கப்படும்.

7. தகுதியான விண்ணப்பத்திற்கு தனித்துவ அடையாள எண் (Unique ID) வழங்கப்படும்.

விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து குறுஞ்செய்தி (SMS), வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்

78
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
Image Credit : This is a representative image generated using Gemini AI

விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

விண்ணப்பத்தின் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • மணப்பெண்ணின் ஆதார் அட்டை.
  • குடும்ப அட்டை (ரேஷன் கார்டு).
  • திருமண அழைப்பிதழ்.
  • விண்ணப்பத்திற்குத் தேவையான பிற விவரங்கள் மற்றும் ஆதார ஆவணங்கள்.


ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் அடிப்படையில் தகுதிகள் சரிபார்க்கப்படுவதால், அவற்றில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

88
திருமணத்திற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?
Image Credit : This is a representative image generated using Gemini AI

திருமணத்திற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பதுடன் சில முக்கிய நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

  • திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.
  • திருமணப் பதிவு தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
  • விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் திருமண விவரங்கள் சரிபார்க்கப்படும்.
  • இது முக்கியமான நிபந்தனையாகும். எனவே, திருமணம் முடிந்த பிறகு 15 நாட்களுக்குள் திருமணப் பதிவைச் செய்துகொள்ள வேண்டும்


விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?

  • விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும்.
  • நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
  • மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
  • விண்ணப்பதாரர் தகுதியுடையவர் என்பது உறுதியானால் திட்டத்தின் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இதன் மூலம் தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து, மீண்டும் முறையிட முடியும்

திருமணம் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான நிகழ்வு. அதேநேரத்தில், திருமணத்திற்கான செலவுகளைச் சமாளிப்பது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அண்ணன் சீர் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயமும் பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளது.

முன்னதாக இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது யாரெல்லாம் பயன்பெறலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன நிபந்தனைகள் பின்பற்ற வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளன.

இதனால் திருமணத்திற்கு தயாராகி வரும் தகுதியுள்ள பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறையைத் தெரிந்துகொள்ள முடியும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(37.2 ov)121/3
SLSL
98
Day 1
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Madurai Tanishq Robbery : மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை..மொத்த நகைகளும் மீட்பு! 3 பேர் கைதின் முழு பின்னணி
Recommended image2
Sekar Babu Controversy : தெருக்கூத்தாடிகளா எங்கள் கலைஞர்கள்? கொந்தளித்த புஷ்பவனம் குப்புசாமி.. சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் பதிலடி!
Recommended image3
Top 5 Richest Districts: தமிழ்நாட்டின் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் இவைதான்.. முழு லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
Sekar Babu Controversy : தெருக்கூத்தாடிகளா எங்கள் கலைஞர்கள்? கொந்தளித்த புஷ்பவனம் குப்புசாமி.. சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் பதிலடி!
Recommended image2
Madurai Tanishq Robbery : மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை..மொத்த நகைகளும் மீட்பு! 3 பேர் கைதின் முழு பின்னணி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved