MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்.! 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு.. எந்தெந்த மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்?

விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்.! 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு.. எந்தெந்த மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்?

வைகை அணையில் இருந்து 45,041 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு ஏக்கர் பாசன வசதி? 100 நாட்கள் தண்ணீர் விநியோக விவரங்கள்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 18 2026, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
விவசாயத்திற்கு தண்ணீர்.! இனி மகசூல் டபுளாகும் மக்கா.!
Image Credit : This is a representative image generated using ChatGPT

விவசாயத்திற்கு தண்ணீர்.! இனி மகசூல் டபுளாகும் மக்கா.!

தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெற உள்ளன. நீண்ட நாட்களாக தண்ணீர் திறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பருவமழை பொழிவு, அணையின் நீர்மட்டம் உள்ளிட்ட காரணங்களால் வழக்கமாக ஜூன் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இந்த ஆண்டு தாமதமானது. தற்போது வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், விவசாயப் பணிகளுக்கு உதவும் வகையில் அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு!
Image Credit : our own

45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு!

தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக சாகுபடி நிலங்களில் முதல் போக சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி, நவம்பர் 14, 2026 முதல் வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கத் திட்டமிடப்பட்டது. முதல் 30 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கவும், அடுத்த 70 நாட்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் தண்ணீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 100 நாட்களுக்கு 5,357 மில்லியன் கன அடி தண்ணீருக்கு மிகாமல் திறக்கப்படும். இருப்பினும் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்தே தண்ணீர் விநியோகம் அமையும்.

38
எந்தெந்த மாவட்ட விவசாயிகளுக்கு எவ்வளவு ஏக்கர் பயன்?
Image Credit : our own

எந்தெந்த மாவட்ட விவசாயிகளுக்கு எவ்வளவு ஏக்கர் பயன்?

இந்தத் திட்டத்தின் மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்க உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற உள்ளன. அதேபோல், மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர் நிலங்களுக்கும், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் நிலங்களுக்கும் பாசன வசதி கிடைக்க உள்ளது.

மொத்தப் பயனாளிப் பகுதிகளில் மதுரை மாவட்டம் அதிக பங்கைக் கொண்டுள்ளது. குறிப்பாக, மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு அதிக அளவில் பாசன வசதி கிடைக்கவுள்ளது. இதன் மூலம் வாடிப்பட்டி, மதுரை வடக்கு மற்றும் நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள். பாசன நீர் கிடைப்பதால் விவசாயப் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளவும், பயிர் சாகுபடியை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48
ஐந்து மாதங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு!
Image Credit : our own

ஐந்து மாதங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு!

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதனால் விவசாயிகளின் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன.

தற்போது வடகிழக்குப் பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, சுமார் ஐந்து மாதங்கள் தாமதமாக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார்.

58
விவசாயிகளுக்கு முக்கியமான எச்சரிக்கை.. தண்ணீர் விநியோகத்தில் மாற்றம்!
Image Credit : Gemini

விவசாயிகளுக்கு முக்கியமான எச்சரிக்கை.. தண்ணீர் விநியோகத்தில் மாற்றம்!

இதற்கிடையில், தண்ணீர் திறப்பு தொடர்பாக மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட வினாடிக்கு 900 கன அடி நீர் திறப்பு, முதல் இரண்டு நாட்களில் முறையே 500 மற்றும் 400 கன அடியாகக் குறைக்கப்பட்டதாக நவம்பர் 16ஆம் தேதி தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுமோ என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இனிவரும் நாட்களில் அரசாணையின்படி கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என அணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

68
விவசாயிகள் கவனிக்க வேண்டியது என்ன?
Image Credit : Asianet News

விவசாயிகள் கவனிக்க வேண்டியது என்ன?

இந்தப் பாசனத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும், தண்ணீர் விநியோகம் அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து மாறக்கூடும் என்பதால் விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம்.

78
நல்ல விளைச்சலைப் பெற உதவும்
Image Credit : Chhattisgarh PR

நல்ல விளைச்சலைப் பெற உதவும்

குறிப்பாக குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் பயிர்களைத் தேர்வு செய்வது, நீர் வீணாவதைத் தடுப்பது, கால்வாய்களில் தண்ணீர் விநியோகத்தை முறையாகக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் நல்ல விளைச்சலைப் பெற உதவும்.

88
விவசாயிகள் எதிர்பார்ப்பது இதுதான்.!
Image Credit : Asianet News

விவசாயிகள் எதிர்பார்ப்பது இதுதான்.!

மொத்தத்தில், வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 45,041 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கியமான ஆதரவாக அமையும். ஆனால் அறிவிக்கப்பட்ட முழு அளவிலான தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே தற்போது விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தமிழ்நாடு அரசு
விவசாயக் கடன்
விவசாயம்
விவசாயக் கடன்
வணிகம்
 
3rd ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
-
ENGENG
(22.2 ov)146/3
ENG chose to bat.
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(45.0 ov)145/4
SLSL
98
Day 2 - Session 1
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
AIADMK Strategy: இடைத்தேர்தல் வந்தால் யார் போட்டியிடுவார்கள்..? வெற்றிக்காக வேட்பாளரைத் தேடும் அதிமுக.?
Recommended image2
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 150 ஆண்டுகால வழக்கத்தை மாற்றினால் சலசலப்பு ஏற்படும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!
Recommended image3
Cyclone Akvan: ருத்ரதாண்டவம் ஆடப்போகும் 'அக்வான்' புயல்.. காத்திருக்கும் அதிர்ச்சி; வெளியான அப்டேட்!
Related Stories
Recommended image1
Tamil Nadu Agri Budget: இனி தடையில்லா விவசாயம் சாத்தியம்..! இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு..!
Recommended image2
TN Agri Budget 2026 : கரும்பு விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்... 50% மானியம் முதல் எத்தனால் ஆலை வரை அதிரடி அறிவிப்புகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved