- Home
- Tamil Nadu News
- இபிஎஸ்-ஐ காலி செய்ய எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்த செங்கோட்டையன்! தவெகவில் இணைவது உறுதி!
இபிஎஸ்-ஐ காலி செய்ய எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்த செங்கோட்டையன்! தவெகவில் இணைவது உறுதி!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நடவடிக்கை, அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளார் என்ற தகவலை உறுதி செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக ஒற்றிணைய வேண்டும் என அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியதை அடுத்து அவரது கட்சிப்பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார். இதனையடுத்து ஓபிஎஸ்வுடன் ஒரே காரில் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு சென்றதை அடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் அடுத்து செங்கோட்டையன் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜயின் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.
எம்எல்ஏ பதவி ராஜினாமா
இந்நிலையில் செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டு, நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவிடம் வழங்கியுள்ளார்.
தவெகவில் முக்கிய பதவி
தவெகவில் இணையும் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவியை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் புஸ்ஸி ஆனந்தனுக்கு இணையான செங்கோட்டையனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த செங்கோட்டையன்
அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

