Seeman : பாமகவிற்கு செக் வைக்கும் நாம் தமிழர்; இரட்டை இலையை கவருவதற்கு சீமான் செய்த சூட்சமம்; கை கொடுக்குமா?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக ஓட்டுக்களை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமியின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிமுகவினரின் வாக்குகளை தங்கள் கட்சிக்கு இழுத்து சாதகமாக்கி கொள்ளலாம் என சீமான் திட்டமிட்டுள்ளார்.
தேர்தலும் தமிழக அரசியல் கட்சிகளும்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் எதிர்கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணியே அனைத்து இடங்களையும் தட்டி பறித்தது. எதிர்கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் திணறியது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பல தொகுதிகளிலும் டெபாசிட்டையும் இழந்தது.
அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்தது. ஆனால் கூட்டணி உதவியோடு போட்டியிட்ட பாமக அங்கீகாரத்தை இழந்தது மட்டுமில்லை தங்களது செல்வாக்கான தொகுதியிலும் தோல்வியே கிடைத்தது.
இடைத்தேர்தல்-அதிமுக புறக்கணிப்பு
இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தொடர் தோல்வியால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது. இதனால் இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. திமுக- பாமக- நாம் தமிழர் கட்சிகள் களத்தில் உள்ளது. வருகிற 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி- மும்முனை போட்டி
திமுகவோ அதிகார பலம், ஆட்சி பலம், மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் கூட்டணி பலத்தோடு களம் இறங்கியுள்ளது. அதே நேரத்தில் இழந்த செல்வாக்கை தக்க வைக்க பாமக இந்த முறை களத்தில் போட்டியிடுகிறது. மேலும் தங்களது வன்னியர்கள் வாக்குகளையும் பெரிதும் நம்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை எப்போதும் போல் தனித்து களம் இறங்கியுள்ளது. இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்த நிலையில் தங்களுக்கு ஆதரவு தரும்படி நாம் தமிழர் கட்சி கேட்டிருந்தது.
அதிமுகவிற்கு நாம் தமிழர் ஆதரவு
இந்த சூழ்நிலையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்திற்கு எதிராக அதிமுக சார்பாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சீமான் ஆதரவு தெரிவித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் நன்றி தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினரின் வாக்குகளை இழுக்க சூப்பர் பிளான் போட்டார் சீமான். விஷச்சாராய மரணத்திற்கு எதிராக குரல் கொடுத்தது போல் ஆனது, அதே நேரத்தில் அதிமுக வாக்குகளை இழுப்பதற்கு வாய்ப்பாகவும் மாற்றிக்கொண்டார்.
Vikravandi By Election
இரண்டாம் இடம் பிடிப்பது யார்.?
எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான திமுக முன்னிலை வகிக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்தது. எனவே இரண்டாம் இடத்தை பிடிக்க பாமகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. எனவே அதிமுக மற்றும் தேமுதிகவின் வாக்குகள் முழுமையாக நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தால் பாமகவை பின்னுக்கு தள்ள வாய்ப்பு உள்ளது.
Summon against Seeman
சீமானின் திட்டம் பழிக்குமா.?
எனவே இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிமுகவின் 100 சதவிகித வாக்குகள் முழுமையாக செல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 50 சதவிகித வாக்குகளை பெறுவார் என கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் பாமக- நாம் தமிழர் கட்சி இடையே டப் பைட் உருவாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.