MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilisai : பாஜகவில் உட்கட்சி மோதலுக்கு முடிவு!!மீண்டும் ஆளுநர் ஆகிறாரா தமிழிசை? அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு

Tamilisai : பாஜகவில் உட்கட்சி மோதலுக்கு முடிவு!!மீண்டும் ஆளுநர் ஆகிறாரா தமிழிசை? அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு

தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அண்ணாமலை- தமிழிசைக்கு இடையே அதிகார மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழிசையை மீண்டும் ஆளுநர் பொறுப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழிசை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.  

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jun 28 2024, 08:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழக பாஜக உட்கட்சி மோதல்

தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்று நாங்கள் என பாஜக கூறிவருகிறது. இதற்கு ஏற்றார் போல போராட்டம், ஆர்ப்பாடம் என அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்தது. இந்தசூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட பாஜக முக்கிய தலைவர்களை தேர்தலில் களம் இறங்கியது.

குறிப்பாக இரண்டு மாநில ஆளுநராக இருந்த தமிழிசை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டவர்களை களம் இறக்கியது. இதனால் பாஜகவின் வாக்கு சதவிகிதமும் அதிகரித்தது. ஆனால் தேர்தலில் போட்டியிட்ட 40 இடங்களில் தோல்வி அடைந்தது. பெரும்பாலான தொகுதியில் டெபாசிட் இழந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தமிழிசை - அண்ணாமலை மோதல்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் அரசியல் களத்திற்கு வந்த அண்ணாமலைக்கும்- தமிழிசைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. யாருக்கு தமிழக பாஜகவில் அதிகாரம் என்ற போட்டி தொடங்கியது.  தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழிசை தமிழக பாஜகவில் ரவுடிகள் அதிகளவு சேர்க்கப்பட்டதாக விமர்சித்தார்.

இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டனர். தனக்கு எதிரான கருத்தால்  அதிருப்தி அடைந்த அண்ணாமலை, பாஜக தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு தடை விதித்தார். பாத்ரூம் போகும் போது வரும் போது இனி பிரஸ் மீட் இல்லையென அறிவித்தார். இது தமிழிசைக்கு வைக்கப்பட்ட செக் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. 

செங்கோலை அவமதிக்கும் இந்தியா கூட்டணி! இப்ப நாச்சி புரிஞ்சுக்கோங்க! இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள்!முருகன்

34

தமிழிசையை கண்டித்த அமித்ஷா

இதற்கு ஏற்றார் போல ஆந்திர மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழிசையை மேடையிலேயே அமித்ஷா கண்டித்தார். இதனால் பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பிறகு தமிழிசை செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திடீர் அழைப்பின் காரணமாக தமிழிசை டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  அப்போது மேடையில் எல்லோருக்கும் முன் பேசியதற்கு அமித்ஷா வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கைவிட்ட நீதிமன்றம்.. கைது பீதியால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவு.. சுத்து போட களமிறங்கிய 5 தனிப்படைகள்!
 

44

மீண்டும் ஆளுநர் ஆகிறார் தமிழிசை

மேலும் இந்த ஆலோசனையின் போது தமிழகத்தில் பாஜகவின் நிலை, வளர்ச்சி மற்றும் உட்கட்சி மோதல் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இரண்டு தலைமை ஒரே இடத்தில் இருப்பதால் அதிகார மோதல் வரும் என்பதை உணர்ந்த பாஜக தலைமை தமிழிசைக்கு வேறு பொறுப்பு கொடுத்து அதாவது ஆளுநர் அல்லது மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வழங்கி அரசியலில் இருந்து  விலக்கி வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

எனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பல மாநில ஆளுநர் பதவி அடுத்த மாதம் காலியாகவுள்ளது. எனவே எதாவது ஒரு மாநிலத்திற்கு தமிழிசை மீண்டும் ஆளுநர் ஆக்கப்படலாம் என தகவல் கூறப்படுகிறது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பிஜேபி
அரசியல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved