'பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தால் சடங்கா?; நீங்க ஏன் தூத்துக்குடி போனீங்க?'; விஜய்க்கு சீமான் கேள்வி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கு என்று கூறிய விஜய்க்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பிறகு விஜய் தூத்துக்குடி சென்று மக்களை சந்தித்தது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Seeman vs Vijay
தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு கோரத்தாண்டவமாடிய பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களை கடுமையாக புரட்டிப்போட்டது. திருவண்ணாமலையில் நிலச்சரிவால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. தமிழ்நாடு அரசு புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை அறிவித்துள்ளது.
TVK Vijay
இதற்கிடையே நடிகரும், தவெக தலைவமான விஜய், புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சென்னையில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்கள் துயரப்படும் நேரத்தில் அவர்களின் இடத்துக்கு சென்று நிவாரண உதவி வழங்கி ஆறுதல் தெரிவிக்காமல் அவர்களை தனது இடத்தில் வரவழைத்து விஜய் உதவி செய்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
ஆனால் இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சீமான், ''விஜய் நேரடியாக களத்துக்கு சென்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாக வந்து விடும். ஆகையால் தான் அவர் வீட்டில் வைத்து நிவாரண உதவி செய்துள்ளார்'' என்றார்.
அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷா; மவுன விரதம் கடைபிடிக்கும் எடப்பாடி; அப்போ அதுதானா?
NTK Seeman
இதன்பிறகு சென்னையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ''தமிழ்நாட்டில் தினமும் நடக்கின்ற பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதில், சம்பிரதாயத்துக்காக மழை நீரில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களுக்காக உணவுப்பூர்வமாக நிற்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையி, சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிரூபர்கள் அவரிடம், ''திரிஷாவுடன் விமானத்தில் சென்ற விஜய், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனரே'' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், ''பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்க செல்லாதது எனக்கு வருத்தமில்லை. ஏனெனில் அவர் அங்கு சென்றால் அவரை பார்க்க கூட்டம் கூடி விடும். காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாது.
Tamilnadu Politics
ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பது சடங்கு என்று விஜய் கூறியது தவறான வார்த்தையாகும். நாங்களெல்லாம் ஒன்று இரண்டு மாதங்கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் உடன் இருந்து வேலை செய்கிறோம். அப்படி என்றால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களையும், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து பாதிக்கப்படவர்களையும் விஜய் சந்தித்தது ஏன்? இதையெல்லாம் சடங்கு என்று விஜய் சொல்வாரா?
பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது ஒரு கடமை; சமூக பொறுப்பு. அதிகாரத்தில் இருப்பவர்கள் வயலில் நடுவே சாலையை போட்டு போவது, சிகப்பு கம்பளம் விரித்து போகிறார்கள்; அதை விமர்சிக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திப்பதை சடங்கு என்று விஜய் கூறுவதை ஏற்க முடியாது'' என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கும் விஜய்?; இதுதான் காரணம்; அதிமுகவுக்கு ஆதரவா?