- Home
- Tamil Nadu News
- நீங்க கூப்பிட்டா உடனே வந்துருவோம்னு நினைச்சீங்களா? எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சீமான்
நீங்க கூப்பிட்டா உடனே வந்துருவோம்னு நினைச்சீங்களா? எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சீமான்
சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சீமானுக்கு அழைப்பு விடுத்த பழனிசாமி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும், திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனிடையே புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தற்போது வரை எந்த கூட்டணியிலும் இணையாமல் உள்ளன. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று பேட்டி அளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தமிழக அரசியலில் பரபரப்பு
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வெற்றி கழகத்தின் விஜய் உள்ளிட்டோரும் எங்கள் கட்சிக்கு வரவேண்டும் என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இந்த அழைப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீமான் பதிலடி
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அழைப்புக்கு சீமான் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், “தேர்தலுக்காக கொள்கைகளை விடுத்து கூட்டணி அமைத்த எத்தனையோ கட்சிகள் காணாமல் போயுள்ளன. அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி இடம் பெறாது. நாங்கள் என்றைக்குமே தனித்து தான் போட்டியிடுவோம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கிட்டதட்ட 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயார் செய்யப்பட்டு விட்டனர்.
150 வேட்பாளர்கள் ரெடி
மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒருசில தினங்களில் வேட்பாளர்கள் தயார் செய்யப்பட்டுவிடுவார்கள். அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கும் நாங்கள் தான் மாற்று என்ற பாதையில் பயணித்து வருகின்றோம். தனித்து போட்டி என்ற பாதயைில் இருந்து நாதக என்றும் மாறாது என்று விளக்கம் அளித்துள்ளார்.