MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK Vijay: ரூ.5,000 கோடி பேரம் தோல்வி?! அமித்ஷாவுக்கு ‘நோ’ சொன்ன விஜய்.! தளபதி முடிவால் கொதிக்கும் டெல்லி!

TVK Vijay: ரூ.5,000 கோடி பேரம் தோல்வி?! அமித்ஷாவுக்கு ‘நோ’ சொன்ன விஜய்.! தளபதி முடிவால் கொதிக்கும் டெல்லி!

தவெக தலைவர் விஜய், பாஜகவின் ரூ.5,000 கோடி மதிப்பிலான கூட்டணி பேரத்தை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த முடிவு டெல்லி மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், தமிழக அரசியலில் புதிய கூட்டணிகளுக்கும், மும்முனைப் போட்டிக்கும் வழிவகுத்துள்ளது. 

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 10 2026, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
அரசியல் கணக்கில் கில்லியா?
Image Credit : x

அரசியல் கணக்கில் கில்லியா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் வேளையில், திரையுலகில் இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேசிய அரசியலின் 'சாணக்கியர்' என்று அழைக்கப்படும் அமித்ஷாவின் வியூகங்களை முறியடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது டெல்லி மேலிடத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
பின்னணியில் நடந்ததாகக் கூறப்படும் 'மெகா டீல்'
Image Credit : X

பின்னணியில் நடந்ததாகக் கூறப்படும் 'மெகா டீல்'

சமீபகாலமாக அரசியல் வட்டாரங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அதாவது, தமிழகத்தில் பலமான காலூன்றத் துடிக்கும் பாஜக, விஜய்யின் ‘தவெக’ கட்சியைத் தங்கள் கூட்டணியில் இணைக்க ஆர்வம் காட்டியது. இதற்காக சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான தேர்தல் நிதி மற்றும் சில முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய ஒரு பெரும் பேரம் பேசப்பட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், விஜய் இந்தப் பேரத்தை மிகத் தீர்க்கமாக நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மக்களின் நம்பிக்கையை விலைக்கு விற்க மாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்ததே இதற்குப் பின்னணியாகச் சொல்லப்படுகிறது.

310
அமித்ஷாவுக்கு 'நோ' சொன்ன விஜய்
Image Credit : X

அமித்ஷாவுக்கு 'நோ' சொன்ன விஜய்

டெல்லி கொதிப்பது ஏன்? டெல்லி மேலிடம் விஜய்யை ஒரு 'ஆதரவு சக்தியாக' அல்லது 'பி-டீமாக' மாற்ற நினைத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கொள்கை முரண்

விஜய் தனது விக்கிரவாண்டி மாநாட்டிலேயே பாஜகவை "கருத்தியல் எதிரி" என்று நேரடியாக அறிவித்தார்.

தனித்துவமான பாதை

அமித்ஷா போன்ற ஆளுமைகளின் அழைப்பை நிராகரிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இந்தத் துணிச்சல், விஜய் தனது அரசியலை சுயமாகவும், திராவிட மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளின் அடிப்படையிலும் கட்டமைக்க விரும்புவதைக் காட்டுகிறது.

மிரட்டல்களுக்குப் பணியாத குணம்

சினிமா படப்பிடிப்புத் தளங்களில் வருமான வரி சோதனை (IT Raid) போன்ற நெருக்கடிகளைச் சந்தித்தபோதும் விஜய் பின்வாங்காதது, தற்போது அரசியலிலும் அவருக்கு ஒரு 'மாஸ்' இமேஜை உருவாக்கியுள்ளது.

410
தற்போதைய அரசியல் சூழல்
Image Credit : X

தற்போதைய அரசியல் சூழல்

: சில முக்கிய கணிப்புகள்

விஜய்யின் இந்த அதிரடி முடிவால் 2026 தேர்தல் களம் மூன்று அல்லது நான்கு முனைப் போட்டியாக மாற வாய்ப்புள்ளது.

அரசியல் தாக்கம், வாக்கு வங்கி

விஜய்யின் வருகை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிக்கும். இது திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே சவாலாக அமையும்.

பாஜகவின் நிலை 

தவெக உடனான கூட்டணி கனவு தகர்ந்ததால், பாஜக மீண்டும் அதிமுகவை நோக்கி நகரலாம் அல்லது சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியைத் தீவிரப்படுத்தலாம். 

510
காங்கிரஸ் - தவெக நெருக்கம்?
Image Credit : X/TVKVijayHQ

காங்கிரஸ் - தவெக நெருக்கம்?

சமீபத்திய தகவல்களின்படி, திமுக கூட்டணியில் அதிருப்தியில் உள்ள காங்கிரஸுடன் விஜய் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. இது அமைந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். அதேபோல் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக இடம்பெயரும் நிலையில் அது மெகா கூட்டணியாக அமையும் என்று அரசியல் வல்லுணர்கள் கூறுகிறன்றனர். இதனால் தமிழகம் மீண்டும் பரபரப்பாக இருக்கிறது.

610
‘தளபதி’ முடிவின் தாக்கம்: டெல்லிக்கு விடுக்கப்பட்ட சவால்?
Image Credit : X

‘தளபதி’ முடிவின் தாக்கம்: டெல்லிக்கு விடுக்கப்பட்ட சவால்?

விஜய்யின் இந்த "நோ" வெறும் மறுப்பு மட்டுமல்ல, அது டெல்லிக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தை விட, மாநிலத் தன்னாட்சி மற்றும் மொழிப் பற்றே மேலோங்கும் என்பதை அவர் மீண்டும் உறுதி செய்துள்ளார். டெல்லி மேலிடம் தற்போது தமிழக பாஜக நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. விஜய்யை வளைக்க முடியாதது அவர்களுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

710
என்ன செய்ய போகிறார் தளபதி
Image Credit : Asianet News

என்ன செய்ய போகிறார் தளபதி

அரசியல் என்பது சதுரங்க விளையாட்டு போன்றது. விஜய் தற்போது ஒரு காயை நகர்த்தியுள்ளார். இது '5,000 கோடி பேரம்' என்ற செய்தியைத் தாண்டி, ஒரு புதுயுக அரசியலுக்கான தொடக்கமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

810
2026 கணிப்பு: யாருக்குப் பாதிப்பு?
Image Credit : X

2026 கணிப்பு: யாருக்குப் பாதிப்பு?

விஜய்யின் அரசியல் வருகை என்பது அதிமுக-வின் வாக்கு வங்கியை விட, திமுக-வின் இளைஞர் அணி வாக்கு வங்கியை அதிகம் பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதேபோல், சீமானின் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளிலும் விஜய் கணிசமான பங்கு வகிப்பார்.

910
எதிர்பார்க்கப்படும் சவால்கள்: டெல்லியின் 'செக்' எங்கே?
Image Credit : X

எதிர்பார்க்கப்படும் சவால்கள்: டெல்லியின் 'செக்' எங்கே?

விஜய் அமித்ஷாவின் அழைப்பை நிராகரித்ததாகக் கூறப்படும் சூழலில், வரும் நாட்களில் அவர் சில நெருக்கடிகளைச் சந்திக்கலாம். தேர்தலுக்குத் தேவையான நிதியைக் கட்டுப்படுத்த மத்திய நிறுவனங்கள் மூலம் சோதனைகள் வர வாய்ப்புள்ளது.விஜய்யின் இமேஜைக் குறைக்க எதிர்மறையான பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்படலாம்.

1010
கிங்கா அல்லது கிங் மேக்கரா?
Image Credit : X

கிங்கா அல்லது கிங் மேக்கரா?

விஜய் தற்போது அமைதியாக இருந்து தனது வேலைகளைச் செய்து வருகிறார். 2026-ல் அவர் "கிங் மேக்கராக" இருப்பாரா அல்லது நேரடியாக "கிங்" ஆக உருவெடுப்பாரா என்பது அவர் அறிவிக்கப்போகும் தேர்தல் கூட்டணிகளைப் பொறுத்தே அமையும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
தமிழ்நாடு
 
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில உரிமைகளைப் புறக்கணிப்பதா? TVK அரசுக்கு எதிராக MP கனிமொழி கண்டனம் !
Recommended image2
Now Playing
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குத்தூண் மற்றும் அதை சுற்றியுள்ள வீதிகளில் குவிந்த மக்கள் !
Recommended image3
Now Playing
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு !
Related Stories
Recommended image1
Now Playing
தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
Recommended image2
அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கி செல்வோம்.. ஆட்சி பீடத்தை வெல்வோம்.. TVK விஜய் கடிதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved