- Home
- Tamil Nadu News
- Farmers Loan : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ 1.20 லட்சம்.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கும் தமிழக அரசு
Farmers Loan : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ 1.20 லட்சம்.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கும் தமிழக அரசு
தமிழக அரசு கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இந்தக் கடன் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

விவசாயிகளுக்கான தமிழக அரசின் திட்டங்கள்
விவசாயிகளுக்காக மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் பல திட்டங்களை அறிவித்துள்ளன. இவை விவசாய உற்பத்தி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசை பொறுத்த வரை கடந்த நிதி நிலை அறிக்கையில் 7,000 விவசாயிகளுக்கு ரூ.215 கோடி மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
வெண்ணைப்பழம், பலா, மிளகாய், உதிரி ரோஜா போன்ற பயிர்களுக்கு சிறப்பு திட்டங்கள் (ரூ.69 லட்சம் முதல் ரூ.11.74 கோடி வரை ஒதுக்கீடு). இயற்கை வேளாண்மைக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு, உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. குழாய் கிணறு, ஆழ்துளை கிணறு, சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைப்பதற்கு 70% மானியம், கரும்பு உற்பத்திக்கு டன்னுக்கு ரூ.215 ஊக்கத்தொகை, மொத்தம் ரூ.841 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
கறவை மாடுகள் வாங்க கடன் உதவி திட்டங்கள்
இதனிடையே தமிழ்நாடு அரசு, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கறவை மாடுகள் வாங்குவதற்காக பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TABCEDCO)சார்பில் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படும்.
கறவை மாடுகள் வாங்க கடன் திட்டங்கள்
- திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்
- ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம்
- பயனாளியின் பங்கு 5 சதவீதம்
தகுதிகள்
- பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் - ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
- விண்ணப்பதாரர்கள் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாகவும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
- சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பயனாளிகளைத் தேர்வு செய்து ஆவினுக்கு பரிந்துரை செய்யும். கடன் தொகை TAMCO மூலம் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டு, பின்னர் பயனாளிகளுக்கு அளிக்கப்படும்.