MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ChatGPT உதவியுடன் ரூ.20 லட்சம் கடனை அடைத்த பெண்! கடன் இருக்கா? உடனே களத்தில் இறங்குங்க!

ChatGPT உதவியுடன் ரூ.20 லட்சம் கடனை அடைத்த பெண்! கடன் இருக்கா? உடனே களத்தில் இறங்குங்க!

ஜெனிபர் ஆலன் என்ற பெண் ChatGPT உதவியுடன் 30 நாள் நிதி சவால் மூலம் $12,000 கடனை அடைத்தார். மறைந்திருந்த சொத்துக்களைக் கண்டுபிடித்து, தேவையற்ற செலவுகளைக் குறைத்ததன் மூலம் இதைச் சாதித்தார். இது AI யின் நல்ல பயன்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 02 2025, 07:26 AM IST| Updated : Jul 02 2025, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
கடனை குறைக்க உதவிய செயற்கை நுண்ணறிவு (AI)
Image Credit : Asianet News

கடனை குறைக்க உதவிய செயற்கை நுண்ணறிவு (AI)

அமெரிக்காவின் டெலவேர் மாநிலத்தை சேர்ந்த 35 வயதான ஜெனிபர் ஆலன் என்பவர், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கடன் சுமையை ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் வெற்றிகரமாகக் குறைத்திருக்கும் சம்பவம் உலகளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.அவரது கதை நம்மில் பலருக்கும் அது ஊக்கத்தையும் தன்நம்பிக்கையும் தரும்.

210
கடனில் சிக்கிய இளம் பெண்
Image Credit : Getty

கடனில் சிக்கிய இளம் பெண்

ஜெனிபர் என்பவர் ரியல் எஸ்டேட் விற்பனையாளர் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்பாளராக சிறப்பாக சம்பாதித்து வந்தாலும், நிதி மேலாண்மையில் அனுபவமின்மையால் கடன்களில் சிக்கினார். வருமானம் கிடைத்தாலும் மருத்துவ செலவுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்பாடு ஆகியவற்றால் தான் கடனில் சிக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
செயற்கை நுண்ணறிவு (AI) தவிர்க்க முடியாதது,அத்தியாவசியமானது! மனிதனின் "அடிப்படைத் தேவை" : மத்திய கல்வி அமைச்சர்
Related image2
Cognitive Debt : செயற்கை நுண்ணறிவால் மனித மூளைக்கு காத்திருக்கும் பேராபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை
310
கடனால் முடங்கிய வாழ்க்கை
Image Credit : twitter

கடனால் முடங்கிய வாழ்க்கை

தனக்கு குழந்தை பிறந்த பிறகு மருத்துவ அவசர நிலைகள், பராமரிப்பு செலவுகள் போன்றவை காரணமாக, தான் மிக அதிகமாக கிரெடிட் கார்டு வசதியை பயன்படுத்த ஆரம்பித்தாக கூறும் ஜெனிபர், தன் குடும்பம் ஆடம்பரமாக வாழவில்லை எனவும் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருந்தோம் என கூறியுள்ளார். ஜெனிபர் தன்னுடைய கவனக்குறைவால் கடன் அதகரித்துக்கொண்டே சென்றது எனவும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களில், ஜெனிபரின் கிரெடிட் கார்டு கடன் சுமார் $23,000 (சுமார் ரூ.19.69 லட்சம்) ஆக உயர்ந்தது. ஒரு நாளில் மாற்றம் தேடி, அவர் ChatGPT யை முயற்சி செய்து பார்க்கத் தீர்மானித்தார்.

410
30 நாள் சவால் - தினமும் ஒரு செயல்திட்டம்
Image Credit : TWITTER

30 நாள் சவால் - தினமும் ஒரு செயல்திட்டம்

ChatGPT உதவியுடன் “30 நாள் நிதி சவால்” (30-Day Personal Finance Challenge) எனும் திட்டத்தைத் தொடங்கினார். தினமும் ChatGPT கிட்ட இருந்து, “இன்றைய ஒரு நிதி நடவடிக்கை என்ன?” என்று கேட்டார்.

510
AI கூறிய சில செயல்கள்
Image Credit : GOOGLE

AI கூறிய சில செயல்கள்

  •  தேவையில்லாத சந்தாக்கள் (subscriptions) நிறுத்துதல்
  •  மறந்துவிட்ட வங்கி கணக்குகள், முதலீட்டு கணக்குகளை மீண்டும் பார்த்தல்
  •  குடும்ப செலவுகளுக்குப் பதிலாக பாண்ட்ரியில் இருப்பவற்றை பயன்படுத்தி உணவு தயாரித்தல்
  • பக்க தொழில்கள் (side hustles) என்ன செய்யலாம் என யோசனை உருவாக்குதல்
610
 உள்ளடக்கிய சொத்துக்கள் கண்டுபிடித்த அதிர்ச்சி
Image Credit : Getty

உள்ளடக்கிய சொத்துக்கள் கண்டுபிடித்த அதிர்ச்சி

ஒரு நாள் ChatGPT கூறிய ஆலோசனையைப் பின்பற்றி, நிதி செயலிகள் அனைத்தையும் சரிபார்க்க ஆரம்பித்தார். அதில் அவர் $10,000 (சுமார் ரூ.8.5 லட்சம்) அளவுக்கு மறைந்திருந்த பணத்தை கண்டுபிடித்தார்! இதில் ஒரு பழைய brokerage account-ம் இருந்தது. மேலும், அவர் கைவசம் இருக்கும் பொருட்களைக் கொண்டு மாதம் முழுவதும் உணவு தயாரித்து, ரூ.50,000 வரை உணவு செலவு குறைத்தார்.

710
கடனை வென்று சாதனை
Image Credit : Getty

கடனை வென்று சாதனை

30 நாட்கள் முடிவில் அவர் $12,078.93 (சுமார் ரூ.10.3 லட்சம்) கடனை திருப்பிச் செலுத்தி விட்டார். இது அவரது மொத்த கடனின் பாதிக்கு மேல். அது மட்டுமல்ல, மீதமுள்ள கடனை அடைப்பதற்கும் அவர் இன்னொரு 30 நாள் சவாலை தொடங்கத் திட்டமிட்டுள்ளார். “இது எந்த பெரிய நிதி ரகசியமும் கிடையாது. தினமும் என் கணக்குகளை நேரில் பார்த்தேன், அதை பற்றிப் பேசினேன், பயப்படாமல் கணக்குகளை கண்காணித்தேன். அதுதான் எல்லாவற்றையும் மாற்றியது,” என்று அவர் பகிர்ந்தார்.

810
அவரது முக்கியமான பாடம்
Image Credit : Getty

அவரது முக்கியமான பாடம்

ஜெனிபரின் சொற்கள் பலருக்கு வழிகாட்டியாக இருக்கின்றன: “நீங்கள் தயாராக இருப்பது வரை அல்லது போதிய அறிவு வரும் வரை காத்திராதீர்கள். எல்லா பதில்களையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒதுக்கி வைக்காமல், அதனுடன் நேருக்கு நேர் சந்திக்க துவங்குங்கள்.”

910
செயற்கை நுண்ணறிவின் நல்ல பயன்பாடு
Image Credit : Getty

செயற்கை நுண்ணறிவின் நல்ல பயன்பாடு

இன்று அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் நிதி அறிவு குறைபாடால் பலர் கடன் சுமையில் சிக்கிக்கொண்டு இருக்கின்றனர். ஜெனிபர் ஆலனின் இந்த சாதனை, செயற்கை நுண்ணறிவின் நல்ல பயன்பாடு எவ்வளவு பலனை தர முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

1010
செயற்கை நுண்ணறிவு உதவும் பயம் வேண்டாம்
Image Credit : chatgpt

செயற்கை நுண்ணறிவு உதவும் பயம் வேண்டாம்

நாம் எல்லோரும் கவனமாக நிதி சிந்தனையுடன் வாழ, பயப்படாமல் கணக்குகளை சரிபார்த்து, தேவையற்ற செலவுகளை குறைத்து, நிதியாளர்களின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை (AI போன்றவை) பயன்படுத்துவதே பரிந்துரைக்கப்படும் நடைமுறை.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கடன்
வணிகம்
முதலீடு
சாட்ஜிபிடி
நிதி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved