MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

Public Exam: 12ம் பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி முடிவடைகிறது. இதன் முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வை 8.7 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 27 2026, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி முன்கூட்டியே அறிவிக்கப்படும். அதன்படி 12ம் பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி முடிவடைகிறது. இதன் முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வை 8.7 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
Image Credit : School education pro

இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 (அரியர்) மற்றும் 10ம் வகுப்புபொதுத் தேர்வுகள் மார்ச் 2 முதல் ஏப்ரல் 6-ம் வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்வு வினாத்தாள்கள் சார்ந்து ஏதேனும் கருத்து இருப்பின் அது தொடர்பாக dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளை பெற்றுத் தெரிவிக்க வேண்டும். கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்பட வேண்டும்.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Related image2
இன்றும் தரமான சம்பவம் இருக்காம்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
34
Image Credit : Google

அதாவது கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்த வினாவில் தவறு அல்லது முரண்பாடு உள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். தேர்வு நடைபெற்ற அதே நாளிலேயே அந்தந்த பாடம் சார்ந்த கருத்துகளை தெரிவிக்கவேண்டும்.

44
Image Credit : our own

இவ்வாறு இல்லாமல் கேள்வித்தாளில் முரண்பாடு, தவறு உள்ளது என்று பொதுப்படையாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். மின்னஞ்சல் மூலம் பெறப்படாத எந்தவொரு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே இந்த விவரங்களை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுகவில் இணைகிறார் தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம்..! கலகலக்கும் அரசியல் களம்
Recommended image2
Now Playing
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்லகண்ணு ஐயா தான் உதாரணம் ! பிரேமலதா பேட்டி
Recommended image3
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Related Stories
Recommended image1
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Recommended image2
இன்றும் தரமான சம்பவம் இருக்காம்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved