- Home
- Tamil Nadu News
- திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரத்திலும்! பக்தர்கள் பீதியில் உறையும் அளவுக்கு நடந்தது என்ன?
திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரத்திலும்! பக்தர்கள் பீதியில் உறையும் அளவுக்கு நடந்தது என்ன?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடுவதைப் புனிதமாகக் கருதுகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவது குடும்பக் கஷ்டங்களைத் தீர்க்கும் என நம்பப்படுகிறது.

அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் திடீரென கடல் நீர் உள்வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகப் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலம் இந்தியாவில் தமிழகத்தில் தெற்கோடியில் ராமேஸ்வரம் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அனைத்து மாநிலங்கள் உள்பட உலக நாடுகளிலிருந்து வருகை தருகின்றனர். குறிப்பாக இங்கு வருகை தரும் பக்தர்கள் காசிக்கு நிகராக கருதப்படும் புண்ணிய தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது குடும்ப கஷ்டங்களை கழித்து நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஐதீகமாக கருதுகின்றனர்.
இந்நிலையில், ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகள் தெரிந்தது. இதனால் மணல் பரப்பாக தெரிந்த கடற்கரை பரப்பில் தரைதட்டி நின்றது. சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என கடல்வள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.