MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரும்பு விவசாயிக்கு ரூ.1000 ஊக்கத்தொகை.! முதலமைச்சருக்கு பறந்த முக்கிய கோரிக்கை

கரும்பு விவசாயிக்கு ரூ.1000 ஊக்கத்தொகை.! முதலமைச்சருக்கு பறந்த முக்கிய கோரிக்கை

கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு டன்னுக்கு ரூ.3,550 என அறிவித்திருப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை போதுமானதல்ல எனவும், தமிழக அரசு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிகைக எழுந்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : May 01 2025, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கரும்பு விவசாயிகள்

கரும்பு விவசாயிகள்

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பாகும், அந்த வகையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கரும்பு விவசாயிகளின் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,550 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 

26
கரும்பு டன் விலை- விவசாயிகள் எதிர்ப்பு

கரும்பு டன் விலை- விவசாயிகள் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5%  மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு  ரூ.3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும்  என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  கடந்த 2024-25ஆம் ஆண்டில் 9.50% சர்க்கரைத்  திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,151 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டது.

இப்போது ரூ.139, அதாவது 4.41% மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  கரும்புக்கான சாகுபடி செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில்,  4.41% மட்டும் விலையை உயர்த்துவது நியாயமற்றது. இது உற்பத்திச் செலவை ஈடு செய்வதற்கு கூட போதாது என தெரிவித்துள்ளனர். 
 

Related Articles

Related image1
கரும்பு விவசாயிகளுக்கு ஜாக்பாட்! வேளாண் பட்ஜெட்டில் ஊக்கத்தொகை அறிவிப்பு!
Related image2
கரும்பு கொள்முதல் விலை.! விவசாயிகளுக்கு குட் நியூஸா.? தமிழக அரசிதழில் வெளியான முக்கிய தகவல்
36
ஒரு டன் கரும்புக்கு ரூ.5500

ஒரு டன் கரும்புக்கு ரூ.5500

இந்த நிலையில் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.5500 வழங்கப்பட வேண்டும் என்பது தான்  உழவர் அமைப்புகளின் கோரிக்கை ஆகும். ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.3500 வரை செலவாவதாக உழவர்கள் கூறுகின்றனர்.

அதனுடன் 50% லாபமாக ரூ.1750 மற்றும் போக்குவரத்துச் செலவு சேர்த்து டன்னுக்கு ரூ.5500 வழங்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின்  நிலைப்பாடும் ஆகும். ஆனால், உற்பத்தி செலவை விட குறைவாக தொகையை கொள்முதல் விலையாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

46
விவசாயிகளுக்கு மாநில அரசுகள் ஊக்கத்தொகை

விவசாயிகளுக்கு மாநில அரசுகள் ஊக்கத்தொகை

கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குறைவாக நிர்ணயித்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் உழவர்களுக்கு மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்குவது வாடிக்கை.  அதன்படி கடந்த ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்த விலையுடன், தமிழக அரசு ரூ.349 ஊக்கத்தொகை சேர்த்து கரும்புக்கு டன்னுக்கு ரூ.3500 கிடைக்க வகை செய்தது.

நடப்பாண்டில்  டன்னுக்கு ரூ.3700 கிடைக்கும் வகையில்  ரூ.410 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வரலாம் என்று கூறப்படுகிறது.  இதுவும் கூட போதுமானதல்ல. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4100 கொள்முதல் விலை வழங்கப்பட்டது.  

56
குறைந்தது கரும்பு விவசாயம்

குறைந்தது கரும்பு விவசாயம்

நடப்பாண்டில் அது ரூ.4500 ஆக உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் ஒப்பிடும் போது தமிழக அரசு வழங்கவிருக்கும்  கொள்முதல் யானைப்பசிக்கு சோளப்பொரியாகவே  பார்க்கப்படும். 2011&-12ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு 8 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக இருந்தது. ஆனால், நடப்பாண்டில்  அது 2.25 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது.

அதற்கு காரணம் கரும்புக்கு நியாயமான விலை கிடைக்காதது தான்.  இதேநிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில்  தமிழ்நாடு கரும்பு விளையாத மாநிலமாக மாறிவிடும்.  அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடாமல் மத்திய மாநில அரசுகள்  தடுத்து நிறுத்த வேண்டும்.

66
1000 ரூபாய் ஊக்கத்தொகை

1000 ரூபாய் ஊக்கத்தொகை

கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்தி ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ. 4,000 நிர்ணயிக்க வகை செய்ய வேண்டும். அத்துடன் தமிழக அரசின் சார்பில் டன்னுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கி உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கோடைக்காலத்தில் கரும்புச்சாறு
விவசாயக் கடன்
இராமதாஸ்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
கரும்பு விவசாயிகளுக்கு ஜாக்பாட்! வேளாண் பட்ஜெட்டில் ஊக்கத்தொகை அறிவிப்பு!
Recommended image2
கரும்பு கொள்முதல் விலை.! விவசாயிகளுக்கு குட் நியூஸா.? தமிழக அரசிதழில் வெளியான முக்கிய தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved