- Home
- Tamil Nadu News
- கரும்பு கொள்முதல் விலை.! விவசாயிகளுக்கு குட் நியூஸா.? தமிழக அரசிதழில் வெளியான முக்கிய தகவல்
கரும்பு கொள்முதல் விலை.! விவசாயிகளுக்கு குட் நியூஸா.? தமிழக அரசிதழில் வெளியான முக்கிய தகவல்
2024-25 கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. சர்க்கரை ஆலைகளின் திறன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகள் அதற்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பஞ்சாபில் ஒரு டன் கரும்பு விலை ரூ.4100 ஆக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரும்பு விலை ரூ.3150 மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மனிதவளம் மற்றும் எரிபொருள் செலவு அதிகரிப்பு போன்ற நடைமுறை சவால்களாலும் மற்ற பயிர்களைப் போலவே கரும்பு சாகுபடிக்கான செலவும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 12 சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும், 16 தனியார் சர்க்கரை ஆலைகளும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையின் அடிப்படையில் 2024-25 ஆம் ஆண்டு பருவத்திற்கு, கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கரும்பை பொறுத்த வரையில் ஒவ்வொரு பருவத்திற்கும் கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும். அந்தவகையில், சர்க்கரை ஆலை வாரியாக கரும்பின் திறன் அடிப்படையில் இந்த கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sugarcane
இதன்படி, 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவானத் சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு 3ஆயிரத்து 151 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9.85 சதவீத சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு 3ஆயிரத்து 267 ரூபாயாகவும், 10.10 சதவீத சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு 3ஆயிரத்து 344.20 ரூபாயாகவும் 10.65 சதவீத சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு 3ஆயிரத்து 532.80 ரூபாயாகவும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sugarcane
மத்திய அரசு தற்போது விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரும்பு டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக 215 ரூபாய் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.