- Home
- Tamil Nadu News
- ஹாஃப் பாட்டில் பீர் குடிச்சிட்டு இளையராஜா செஞ்ச அலப்பறை - புட்டு புட்டு வைத்த ரஜினிகாந்த்!
ஹாஃப் பாட்டில் பீர் குடிச்சிட்டு இளையராஜா செஞ்ச அலப்பறை - புட்டு புட்டு வைத்த ரஜினிகாந்த்!
Rajinikanth Untold Secret about Ilaiyaraaja : இளையராஜாவின் 50 வருட இசைப்பயணத்தை கௌரவிக்கும் விதமாக சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், இளையராஜா பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ந்த் பேசியது வைரலாகி வருகிறது.

பீர் குடிச்சிட்டு இளையராஜா செஞ்ச அலப்பறை
Rajinikanth Untold Secret about Ilaiyaraaja : தென்னிந்திய திரையுலகை நோக்கி, ஏராளமான இசையமைப்பாளர்கள் படையெடுத்து வந்த போதிலும், அதில் தனித்து தெரிந்தவர் இசைஞானி இளையராஜா. இவரது பல பாடல்கள் ரசிகர்களுக்குள் ஊடுருவி... மனதை அலைபாய வைக்கும். காதல், சோகம், கோபம், மகிழ்ச்சி, வெக்கம், என மனிதனுக்குள் எழும் ஒவ்வொரு உணர்வுகளையும் தூண்டும் விதத்தில், பாடல் எழுதியுள்ளவர் தான் இளையராஜா.
இளையராஜா 50:
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா வெற்றிகரமாக 50 ஆண்டு இசைப்பயணத்தை எட்டியதை, கவுரவிக்கும் விதமாக, தமிழக அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த் , கமல் ஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதே போல் இளையராஜா இசையில் உருவான சூப்பர் ஹிட் பாடல்களும் பாடப்பட்டன.
நான் அஜித் பேன் ஆனா ஓட்டு தளபதிக்கு..! அரியலூரில் காலியாகும் பாமக, விசிக ஓட்டு வங்கி!
பீர் குடிச்சிட்டு இளையராஜா செஞ்ச அலப்பறை - ரஜினிகாந்த்
இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இளையராஜா பற்றிய தங்களுடைய நினைவுகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக இளையராஜா பேசிக்கொண்டே இருக்கும் போது... உள்ளே வந்த ரஜினிகாந்த், இளையராஜாவா இப்படி? என பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு தகவலை கூறினார்.
பீர் குடிச்சிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்:
அதாவது 1980-ஆம் ஆண்டு, இயக்குனர் மஹேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ரிலீஸ் ஆன 'ஜானி' படத்தில் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருந்த சமயம், ஒரு நாள்... மஹேந்திரன் சரக்கு பாட்டிலுடன் வர, ரஜினி என்ன ராஜா நீங்களும் எங்களுடன் சரக்கு அடிக்கிறீர்களா என கேட்டுள்ளார். இதற்க்கு இளையராஜாவும் சரி என கூறி அரைபாட்டில் பீர் மட்டும் குடித்தாராம். இதை குடித்து விட்டு, இரவு 3 மணிவரை இவர் போட்ட ஆட்டம் இருக்கே தாங்க முடியவில்லை என்றும், அந்த சமயத்தில் தான் சினிமா ஹீரோயின்கள் பற்றிய கிசுகிசுவெல்லாம் எங்களிடம் கேட்டார் என ரஜினி கூற... அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. ரஜினியை தொடர்ந்து பேசிய இளையராஜா. பீர் குடித்ததெல்லாம் உண்மை தான் ஆனால் சூப்பர் ஸ்டார் போகிற போக்கில் நடக்காததையெல்லாம் சொல்லிவிட்டு போகிறார் என தனக்கே உரிய பாணியில் புன்னகையை உதிர்த்தார்.
அதிசய மனிதர் இளையராஜா:
அதன் பின்னர் ரஜினிகாந்த், இளையராஜாவை பற்றி பேசும் போது... "புராணங்களில் அதிசய மனிதர்களை பார்த்துள்ளேன். ஆனால், நான் கண்ணால் கண்ட அதிசய மனிதர் இளையராஜா தான் . அவரை பற்றி நிறைய விஷயங்களை பேசிக்கொண்டே இருக்கலாம். 1970,80ம் ஆண்டுகளில் அவர் போட்ட பாடல்கள் இப்போது படங்களில் பயன்படுத்தினாலும் செம ஹிட்டாகி விடும். ஒரு 1,600 பாடங்கள், 800 படங்கள், 1,500 பாடல்களை பாடியுள்ளார். 50 வருடம் என்பது சாதாரண விஷயமே இல்லை? விஜயகாந்த், முரளி, கமல், மோகன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்துள்ளார். அனைவருக்கும் ஒரே மாதிரியான இசையை தான் போடுகிறேன் என இளையாராஜா சொல்வார். ஆனால், அதில் உண்மையில்லை. கமல்ஹாசனுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்டிரா... என தேவர்மகன் படத்தின் பாடலை சுட்டி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.