- Home
- Cinema
- செப்டம்பர் 19-ந் தேதி பாக்ஸ் ஆபிஸை பதம்பார்க்க வரும் படங்கள் என்னென்ன? இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ்
செப்டம்பர் 19-ந் தேதி பாக்ஸ் ஆபிஸை பதம்பார்க்க வரும் படங்கள் என்னென்ன? இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ்
Theatre and OTT Release : செப்டம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் படங்களைப் பற்றியும், ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றியும் பார்க்கலாம்.

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
சக்தித் திருமகன்
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள படம் சக்தித் திருமகன், இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் வாகை சந்திரசேகர், செல் முருகன், கிரண், கண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார். இப்படம் செப்டம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
கிஸ்
கவின் ஹீரோவாக நடித்துள்ள படம் கிஸ். இப்படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்கி உள்ளார். அவர் இயக்கியுள்ள முதல் படம் இதுவாகும். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படத்தில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படமும் செப்டம்பர் 19ந் தேதி திரைக்கு வர உள்ளது.
தண்டகாரண்யம்
பா.இரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தண்டகாரண்யம். இப்படத்தில் நடிகை ரித்விகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் யுவன் மயில்சாமி, அருள்தாஸ், சரண்யா, ஷபீர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற செப்டம்பர் 19-ந் தேதி திரைகாண உள்ளது.
ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகும் படங்கள்
ஹவுஸ் மேட்ஸ் – செப்டம்பர் 19
கார்த்திக், அனு என்ற புதுமணத் தம்பதிகள் தங்கள் கனவு இல்லத்திற்கு வந்த பிறகு விசித்திரமான அனுபவங்களை சந்திக்கின்றனர். இந்த வீட்டின் ரகசியம் உண்மையில் மிகவும் அதிர்ச்சியூட்டும். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
இஸ் சீசன் 2 - செப்டம்பர் 19
இஸ் என்கிற வெப் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற செப்டம்பர் 19-ந் தேதி முதல் ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்த வெப் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது.
போலீஸ் போலீஸ் - செப்டம்பர் 19
சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள வெப் தொடர் தான் போலீஸ் போலீஸ். இந்த வெப் சீரியல் செப்டம்பர் 19ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
இந்திரா - செப்டம்பர் 19
வஸந்த் ரவி, மெஹ்ரின் பிர்சாடா நடிப்பில் வெளியான இந்திரா என்கிற த்ரில்லர் திரைப்படம் செப்டம்பர் 19ந் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
தி டிரையல் சீசன் 2– செப்டம்பர் 19
கஜோல் நயோனிகா சென்குப்தா வேடத்தில் மீண்டும் தோன்றுகிறார். புதிய சவால்கள், குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்த சீசனில் காணலாம். அஸ்ராணி, கரண்வீர் சர்மா புதிதாக குழுவில் இணைந்துள்ளனர். இது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஜென் வி சீசன் 2 - செப்டம்பர் 17
இந்தத் தொடரை பிரைம் வீடியோ செப்டம்பர் 17, 2025 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகும் படங்கள்
பிளாக் ராபிட் – செப்டம்பர் 18
நியூயார்க் நகரத்தில் ஒரு ஹாட்ஸ்பாட் உரிமையாளர் தனது பிரச்சனையான அண்ணனை மீண்டும் தனது வாழ்க்கையில் அனுமதிக்கும்போது, அவர் கட்டிய சாம்ராஜ்யமே ஆபத்தில் உள்ளது. ஜூட் லா, ஜேசன் பேட்மேன் நடித்துள்ளனர்.
பிளாட்டோனிக் – செப்டம்பர் 18
ப்ளூ மூன் ஹோட்டலில் ஒரு விருந்தாளி வந்தவுடன் இரண்டு சகோதரிகளின் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான காதல் முக்கோணம் தொடங்குகிறது. கப்ஸ் ஓஜே, கெரம் பர்சின், ஓய்கு கரயேல் நடித்துள்ளனர்.
மை லவ்லி லையர் – செப்டம்பர் 19
ஒரு நபர் பொய்களை கண்டுபிடிக்கும் சக்தி கொண்ட மோக் சால்-ஹீ, ஒரு மர்மமான பாடலாசிரியரை சந்திக்கும் போது தனது திறன் மீது சந்தேகம் கொள்கிறார்.
ஷீ சைட் மேபி – செப்டம்பர் 19
ஜெர்மனியில் வளர்ந்த மேவி, தான் ஒரு பணக்கார துருக்கிய குடும்பத்தின் வாரிசு என்பதை அறிந்த பிறகு அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.
பில்லியனேர்ஸ் பங்கர் – செப்டம்பர் 19
ஒரு உலகளாவிய மோதலின் போது, ஒரு சொகுசு பதுங்கு குழியில் ஒளிந்துகொண்ட பில்லியனர்களிடையே பழைய பகை மீண்டும் வெடிக்கிறது.
28 இயர்ஸ் லேட்டர் – செப்டம்பர் 20
ரேஜ் வைரஸ் பரவிய பல தசாப்தங்களுக்குப் பிறகு, எஞ்சியிருக்கும் உயிர் பிழைத்தவர்கள் ஒரு தீவில் வாழ்கின்றனர். ஆனால் வெளியே செல்லும் ஒரு நபர் பயங்கரமான ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறார். டேனி பாயில், அலெக்ஸ் கார்லேண்ட் ஆகியோரிடமிருந்து வரும் இந்தப் படம் கிளாசிக்கின் தொடர்ச்சியாகும்.