- Home
- Tamil Nadu News
- சேகர் பாபு, பிரியா அட்ராசிட்டி தாங்கமுடியல... விஜயிடம் போட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்
சேகர் பாபு, பிரியா அட்ராசிட்டி தாங்கமுடியல... விஜயிடம் போட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் முடிவால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 12 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் விஜய், தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் அழகு- தூய்மைப்பணியாளர்கள் கையில்
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அழகை கட்டிகாப்பதில் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. ஒரு சில நாட்கள் குப்பைகள் அள்ளவில்லையென்றால் அவ்வளவு தான், சென்னையே நாரி விடும். அந்த அளவிற்கும் தினந்தோறும் பல டன்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பை அள்ளும் பணியில் சென்னை மாநாகராட்சி சார்பாக ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் (ராயபுரம், திரு.வி.க. நகர்) தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை மாநகராட்சி எடுத்துள்ளது.
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்
இதன் காரணமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் பாதிக்கப்படும் என்ற அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்களாக மாதம் ரூ.22,950 பெற்று வந்தவர்களுக்கு, தனியார் நிறுவனங்களின் கீழ் பணியாற்றினால் ரூ.16,950 அல்லது பிடித்தம் போக ரூ.12,500 மட்டுமே கிடைக்கும் என்று தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் - விஜய் ஆதரவு
தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். தற்போது பெறும் ஊதியம் ரூ.22,950 குறைக்கப்படாமல், பணி பாதுகாப்புடன் தொடர வேண்டும். தனியார் மயமாக்கப்பட்டாலும், தற்போதைய தொழிலாளர்களின் பணி இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மற்றவர்களால் நிரப்பப்படக் கூடாது என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டம் இன்று 12வது நாளை தொட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள், கட்சிகள், நடிகைகள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், தூய்மை பணியாளர்களை தனது பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து குறைகளை கேட்டறிந்தார்.
சேகர்பாபுவை போட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர்கள்
அப்போது பணியாளர்கள் கடந்த 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தினந்தோறும் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் உரிய தீர்வு கிடைக்கவில்லையென கூறியுள்ளனர். மேலும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா தங்களது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தையின் போது கடுமையாக நடந்து கொள்வதாகவும், தூய்மை பணியாளர் பணி நிரந்தரம் தொடர்பாக திமுக தேர்தல் வாக்குறுதி தொடர்பாக கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் மழுப்புவதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தூய்மை பணியாளர்களுக்கு என்றும் தவெக ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.