சுளையா மீண்டும் 3 நாள் லீவு.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களினால் தொடர் விடுமுறை கிடைப்பதால் மக்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

தொடர் விடுமுறையால் கொண்டாட்டம்
விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அதிலும் தொடர் விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் விடுமுறையை அள்ளிக்கொடுக்கும் மாதமாகவே அமைந்துள்ளது.
எனவே இயந்திர வாழ்க்கைக்கு பழகிக்கொண்ட மக்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் விடுமுறை தான் சற்று இளைப்பாறும் நாளாக உள்ளது. அதிலும் 2 அல்லது 3 நாள் விடுமுறை வந்தால் கேட்கவா வேண்டும். வெளியூர்களுக்கோ உறவினர் வீட்டிற்ககோ புறப்பட்டு விடுவார்கள்.
ஆகஸ்ட்டில் கொத்தாக வரும் விடுமுறை
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் விடுமுறை இல்லாம ஏமாற்றமான மாதமாக அமைந்தது. தற்போது கொத்தாக ஒரே மாதத்தில் 11 முதல் 12 நாள் விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் ஆகஸ்ட் மாதத்தை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் 8,9 மற்றும் 10 ஆகிய தினங்கள் பெரும்பாலான பள்ளிகளில் 3 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கடந்த 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பையொட்டி பெருப்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை காரணமாகவும் தொடர்ந்து 3 நாள் விடுமுறை கிடைத்தது.
ஆகஸ்ட் 15,16 மற்றும் 17 தொடர் விடுமுறை
இதே போல வரும் வாரமும் 3 நாள் கொத்தாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைக்கவுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா, ஆகஸ்ட் 16ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி,
ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை என தொடர்ந்து 3 நாள் விடுமுறை கிடைக்கவுள்ளது. எனவே சுற்றுலா செல்வதற்கும், உறவினர்கள் வீட்டிற்கு பயணம் செய்யவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரும்பாலான மக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 27 - விநாயகர் சதுர்த்தி விடுமுறை
தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் நெல்லை, மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்ததாக வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரசு விடுமுறையானது கிடைக்கவுள்ளது. எனவே ஆகஸ்ட் மாதம் விடுமுறை அள்ளிக்கொடுக்கும் மாதமாகவே அமைந்துள்ளது.