- Home
- Tamil Nadu News
- தொடர் விடுமுறை! ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! உடனே புக் பண்ணுங்க!
தொடர் விடுமுறை! ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! உடனே புக் பண்ணுங்க!
தமிழ்நாடில் சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன? என்பது குறித்து பார்ப்போம்.

Independence Day Holiday Special Buses
நமது நாட்டின் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இந்நிலையில், சுதந்திர தின தொடர் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகள்
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: 15/06/2025 அன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/08/2025 அன்று சென்னையிலிருத்தும் மற்றும் பிற இடங்களிலிருத்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருத்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை டூ நெல்லை, மதுரை சிறப்பு பேருந்துகள்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/08/2025 (புதன்கிழமை) அன்று 375 பேருந்துகளும் 14/08/2025 (வியாழக்கிழமை) அன்று 570 பேருந்துகளும். 15/08/2025 (வெள்ளிக் கிழமை) மற்றும் 18/08/2025 (சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கம்
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை. வேளாங்கண்ணி ஒரு பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/08/2025 வியாழக்கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் 15/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர் திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இகளிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 14/08/2025 மற்றும் 15/08/2025 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருத்துகளும் இயக்கப்படுகிறது.
சொந்த ஊர்களில் இருந்தும் பேருந்து வசதி உண்டு
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருத்தும் 17/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 715 சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 8145 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 26,534 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 5,004 பயணிகளும். சனிக்கிழமை 3,676 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 23268 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
உடனே டிக்கெட் புக் பண்ணுங்க!
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயனம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பாகவே தங்களது பயணத்திற்கு Www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருத்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பெருத்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.