சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பின்படி, இன்று உடுமலைப்பேட்டை, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- FB
- TW
- Linkdin
Follow Us

தமிழ்நாடு மின்சார வாரியம்
தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் கொஞ்சம் நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்ட போதும் உடனே மின்வாரியத்திற்கு போன் செய்து எப்போது மின்சாரம் வரும் கேட்கும் அளவுக்கு இருந்து வருகிறோம். இந்நிலையில் தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.
உடுமலைப்பேட்டை
தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.
தேனி
லோயர் கேம்ப், கே.கே.பட்டி, மணாலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
சேலம்
எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்.
பெரம்பலூர்
அதனாக்குறிச்சி, துளார் சுரங்கம், அயந்தனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
போரூர்
திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலம்தண்டலம், நாகன் தெரு, எருமையூர், கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.