- Home
- Tamil Nadu News
- கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததுமே 3 நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததுமே 3 நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 9ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில் மாணவர்கள் காலண்டரை பார்க்க தொடங்கி விட்டனர். எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை, எத்தனை நாட்கள் வருகிறது என்பதை பார்ப்பதற்காக. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அரசு விடுமுறை தவிர்த்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள், கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
திருச்செந்தூர் முருகன் கோவில்
இந்நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானது திருச்செந்தூர் முருகன் கோவில். இக்கோவிலில் விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக நாளை தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பத்தாம் நாளை ஜூன் 9ம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
ஜூன் 9ம் தேதி விடுமுறை
இந்நிலையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஜூன் 9ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதி ஜூன் 9ம் தேதி திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணிகள் இயங்கும்
எனினும் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறை சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று நாட்கள் விடுமுறை
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சனி, ஞாயிறு வார விடுமுறையும் வருவதால் மொத்தம் அந்த மாவட்டத்திற்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளிக் குதிக்கின்றனர்.