- Home
- Tamil Nadu News
- ஒரே நேரத்துல தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் வெளியான தகவல்!
ஒரே நேரத்துல தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் வெளியான தகவல்!
மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மதுரை, தேனி, அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
மதுரை
கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி, பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
தேனி
அரைப்படித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குல்லாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அஸ்தினாபுரம்
RB சாலையின் ஒரு பகுதி, வேல்முருகன் தெரு, வினோபாஜி நகர், மகேஸ்வரி நகர், திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.