MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அப்போ செல்லூர் ராஜூ... இப்போ தம்பிதுரை.! குறிவைத்து அவமரியாதை செய்கிறார் இபிஎஸ்.! சீறும் ஓபிஎஸ்

அப்போ செல்லூர் ராஜூ... இப்போ தம்பிதுரை.! குறிவைத்து அவமரியாதை செய்கிறார் இபிஎஸ்.! சீறும் ஓபிஎஸ்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் செல்லூர் ராஜூ மற்றும் தம்பிதுரை போன்ற மூத்த தலைவர்களுக்கு அவமரியாதை இழைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். 

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 14 2025, 01:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செல்லூர் ராஜூ, தம்பிதுரைக்கு அவமரியாதை.?
Image Credit : x/ sellur raju

செல்லூர் ராஜூ, தம்பிதுரைக்கு அவமரியாதை.?

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுசெயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ மற்றும் தம்பிதுரையை அவமரியாதை செய்ததாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். சாதாரணத் தொண்டன் வணக்கம் தெரிவித்தாலும், பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் பண்பை கொண்டவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களும், அம்மா அவர்களும், தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.

24
இபிஎஸ்யை விமர்சிக்கும் ஓபிஎஸ்
Image Credit : PTI

இபிஎஸ்யை விமர்சிக்கும் ஓபிஎஸ்

அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. ஒரு சிறந்த தலைவர் என்பவர் அனைவரையும் துணையாகக் கொண்டு, அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து, இயக்கத்தை திறம்பட மேலாண்மை செய்வார். இதற்கு மாறாக செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக இருப்பார்.

ஆணவம், கடுங் கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களை கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள். தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடத்தில் மாபெரும் மக்கள் இயக்கமாம் அதிமுக தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால்,

Related Articles

Related image1
தமிழ்நாடே பார்த்து கலங்குது.! இன்னும் 8 மாதங்கள் தான்.. ஸ்டாலினுக்கு தேதி குறித்த எடப்பாடி
Related image2
தூய்மை பணியாளர்களுக்கு கொத்து கொத்தாக புதிய அறிவிப்பு .! அமைச்சரவையில் அதிரடி முடிவு
34
எடப்பாடியிடம் அதிமுக சிக்கியுள்ளது
Image Credit : our own

எடப்பாடியிடம் அதிமுக சிக்கியுள்ளது

முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு அவர்கள் மதுரையில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது திரு. செல்லூர் ராஜு அவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை. 

இதேபோன்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும், மாண்புமிகு அம்மா அவர்களின் காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக பதவி வகித்தவரும். மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு. தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை.

44
குறிவைத்து அவமரியாதை
Image Credit : our own

குறிவைத்து அவமரியாதை

இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது திரு. மு. தம்பிதுரை அவர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. "செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்" என்றார் திருவள்ளுவர். இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில் தான் முடியும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி அதிமுக
அரசியல்
அதிமுக பாஜக கூட்டணி
Latest Videos
Recommended Stories
Recommended image1
'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்காக களமிறங்கிய இபிஎஸ்.. ஆதவ் அர்ஜுனாவை ஆஃப் செய்த அதிரடி பதில்!
Recommended image2
ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்.. விஜய்க்கு தலைவலி!
Recommended image3
Now Playing
விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
Related Stories
Recommended image1
தமிழ்நாடே பார்த்து கலங்குது.! இன்னும் 8 மாதங்கள் தான்.. ஸ்டாலினுக்கு தேதி குறித்த எடப்பாடி
Recommended image2
தூய்மை பணியாளர்களுக்கு கொத்து கொத்தாக புதிய அறிவிப்பு .! அமைச்சரவையில் அதிரடி முடிவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved